69 வயதில் தந்தையாகும் ஹாலிவுட் நடிகர்.. ஷில்பா ஷெட்டியை முத்தமிட்டு பரபரப்பாக்கியவர்! | Richard Gere expecting baby at his 69! 11-8-2018

0
0

நியூயார்க்: பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சர்டு கெரே 69 வயதில் அப்பாவாகப் போகிறார்.

ராபர்ட் டு த கமிஷனர் என்ற திரைப்படத்தின் மூலம் 1975 ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமாகி பல திரைப்படங்களின் நடித்துள்ளார்.

பேபி ப்ளூ மரைன், டேய்ஸ் ஆப் ஹெவன், இண்டெர்னல் அப்பையர்ஸ், சோமர்ஸ்பை, ப்ரைமல் ஃபியர்,ரன்வே பிரைட் என பல படங்கள் அவரின் நடிப்புக்கு புகழ்தேடித்தந்தன.

ஆரம்ப காலங்களில் அமெரிக்க நடிகைகளான ஃபினலோப் மில்போர்டு, பிரிஸிலா ப்ரெஸ்லே, கிம் பேசிங்கர் போன்றவர்களோடு நெருக்கமாக இருந்தார் கெரே.

அதன்பிறகு, 1991ஆம் ஆண்டு நடிகை சிண்டி கிராபோர்டை திருமணம் செய்துகொண்டார். பிறகு 1995ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து செய்துகொண்டனர்.

பிறகு, நடிகை கேரி லோவலை திருமணம் செய்துகொண்டார். கேரி லோவல் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். இவர்களுக்கு 18 வயதில் தற்போது ஹோமர் ஜேம்ஸ் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில், 2016ஆம் ஆண்டு கேரி லோவலை விவகாரத்து செய்துவிட்டு பேச்சிலர் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த ரிச்சர்டு கெரே, கடந்த ஏப்ரல் மாதம் அலஜாண்ட்ரா சில்வா என்ற ஸ்பானிய பெண்ணை மணந்தார்.

2014 ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள அலஜாண்ட்ராவின் ஹோட்டலில் தங்கியிருந்தபோதே ரூட் விட ஆரம்பித்திருக்கிறார். பிறகு ஒருவழியாக திருமணம் செய்யலாம் என முடிவெடுத்து ஏப்ரலில் திருமணம் செய்துள்ளனர்.

35 வயதாகும் அலஜாண்ட்ராவுக்கு இது இரண்டாவது திருமணம். ஏற்கனவே அவருக்கு ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரிச்சர்டு கெரேவின் கருவை சுமந்துகொண்டிருக்கிறார். வெகு விரைவில் அவர்கள் வீட்டில் குவா குவா சப்தம் கேட்கப்போகிறது. ரிச்சர்டுக்கு கெரேவுக்கு வயது 69 என்பது குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், நடிகை ஷில்பா ஷெட்டியைக் கட்டித் தழுவி முத்தமிட்டதற்கு, பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.