6 மணி நேரம் வானில் பறந்து… உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்! | Ajith drone made world record!

0
0

சென்னை: தல அஜித்தின் ஆலோசனையில் மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம் புதிய சாதனை படைத்துள்ளது.

அஜித் ஒரு நடிகர் மட்டுமல்லாமல், கார் ரேசர், பைக் ரேசர் என்பது தெரிந்த விஷயம். பைட்டர் ஜெட் இயக்கக்கூடிய அளவுக்கு நன்கு பயிற்சி பெற்று பைலட் லைசன்சும் வைத்திருக்கிறார்.

அஜித்தின் இந்த திறனை மாணவர்களுக்கு பயன்படுத்தும் விதமாக மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அவசரகாலங்களிலும், பேரிடர் நேரத்திலும் மருத்துவ உதவிசெய்வதற்கு பயன்படும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை தயாரிக்க முடிவு செய்தது.

டீம் தக்‌ஷா

இதற்காக டீம் தக்‌ஷா எனும் பெயரில் புதிய மாணவர் குழுவை உருவாக்கினார்கள் அதில் அஜித் முக்கிய ஆலோசகராக செயல்பட்டார். ஏற்கனவே அஜித் இதுபோன்ற குட்டி விமானங்களை உருவாக்கி இருந்ததால் இந்தக் குழு அஜித்தின் உதவியை நாடியது.

சாதனைகள்

சாதனைகள்

அஜித்தின் ஆலோசனையோடு உருவாக்கப்பட்ட அந்த ட்ரோன் இந்தியா முழுவதும் உள்ள 111 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளது. சமீபத்தில் நடந்த போட்டியில் இந்த தக்‌ஷா ட்ரோன் 6 மணி நேரம் 7 நிமிடம் வானத்தில் பறந்து உலகத்திலேயே அதிக நேரம் பறக்கக்கூடிய ட்ரோன் என சாதனை படைத்துள்ளது.

ஆராய்ச்சி:

ஆராய்ச்சி:

இதில் கூடுதல் விஷயம் என்னவென்றால், இந்த ட்ரோன் மூலம் 10 கிலோ வரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். இதை பயன்படுத்தி மருந்து உதவிகளை மேற்கொள்ள முடியுமா என்று தல அஜித் உள்பட அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர்.

பாராட்டு:

பாராட்டு:

இந்த ஆளில்லா விமானம் தயாரிப்பதில் அஜித்திற்கு இருக்கும் அறிவை வைத்து உலக அளவிலான மாணவர்களுக்கு பாடம் எடுக்க முடியும் என்று பேராசிரியர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.