5 மாவட்டங்களில் கனமழை அபாயம்

0
33

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத. ஆனால் சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. அதன் தாக்கம் காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்த வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறுகையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை தொடரும்.

கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கனமழை பெய்யும். மழை தீவிரமடைந்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும். தென் தமிழக கடலோர பகுதிகளில் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயர்ந்து காணப்படும். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தரைக்காற்று பலமாக வீசும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.