12 சிறுவர்கள், பயிற்சியாளர் சிக்கிய தாய்லாந்தின் ஆபத்தான குகையை  அருங்காட்சியகமாக மாற்ற முடிவு

0
6

தாய்லாந்தின் ஆபத்தான குகையை அருங்காட்சியகமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது.

தாய்லாந்தின் வடக்கு பகுதியில் மியான்மர் எல்லையில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. பத்து கி.மீ. தூரம் உள்ள இந்த குகையில் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள், பயிற்சியாளர் என 13 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்க 4 மாதங்கள் ஆகும் என்று முதலில் கூறப்பட்டது எனினும் பலதரப்பில் இருந்து வந்த தொழில்நுட்ப உதவிகள் மூலம்  மழை வெள்ளத்தால் சூழ்ந்த குகையில் இருந்து உயிரைப் பணயம் வைத்து 17 நாட்களுக்குப் பிறகு மீட்புப் படையினர் மீட்டனர். அதன்பின் அந்தக் குகைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், உலகின் பல நாடுகள் பங்கேற்ற இந்த மீட்புப் பணியை அங்கீகரிக்கும் வகையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களின் நினைவாகவும், இந்த தாம் லுவாங் குகையை அருங்காட்சியகமாக மாற்ற தாய்லாந்து அரசு முடிவெடுத்துள்ளது. அனைத்துவிதமான பாதுகாப்பு அம்சங்களுடன் குகைக்குள் சென்று பார்வையிடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், 13 பேரை மீட்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குகைக்குள் எந்தெந்தப் பகுதியில் என்னென்ன நடவடிக்

கைகள் எடுக்கப்பட்டன, யார் யார் மீட்புப் பணியில் ஈடுபட்டார்கள் போன்ற விவரங்களையும் குகைக்குள் வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன்மூலம் தாம் லுவாங் குகைபகுதி சிறந்த சுற்றுலா தளமாக மாறும். அந்தப் பகுதி வளர்ச்சி அடையும். அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும் என்று தாய்லாந்து அரசு கருதுகிறது.

இதற்கிடையில், குகைக்குள் இருந்து சிறுவர்களை மீட்ட வீடியோவை தாய்லாந்து அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. மேலும், மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வரும் காட்சிகள், சிறுவர்கள் உற்சாகமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து மீட்புப் பணிகளின்

தலைவர் நரோங்சாக் ஒசாடானாகார்ன் கூறும்போது, ‘‘தாய்லாந்து குகையை அருங்காட்சியகமாக மாற்றி, அங்கு மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்ட உடைகள், கருவிகளைக் காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளோம். இது தாய்லாந்தின் இன்னொரு சிறப்பாக உருவாகும்’’ என்று தெரிவித்தார்.