12ம் தேதி ரிலீஸாகும் தமிழ் படம் 2: செம கடுப்பில் இருக்கும் விஜய் ரசிகர்கள் | Tamizh Padam 2 to hit screens on july 12

0
0

சென்னை: தமிழ் படம் 2 வரும் 12ம் தேதி ரிலீஸாகும் என்பதை அறிவிக்க விஜய்யின் சர்கார் போஸ்டரை கலாய்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் படம் 2 படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கவே பல போஸ்டர்களை வெளியிட்டனர். மேலும் தேதியை சொல்லாமல் சூசமாக ட்வீட்டினார்கள்.

இந்நிலையில் ஒரு வழியாக ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டனர்.

தமிழ் படம் 2

தமிழ் படம் 2 ஜூலை 12ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்க விஜய்யின் சர்கார் பட போஸ்டரை கலாய்த்து ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ

நேற்று ##GobackAmitShah என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டான நிலையில் #GoBackSanthanaBarathi என்ற ஹேஷ்டேக்கை போட்டு ஒரு குட்டி வீடியோவையும் தமிழ் படம் 2 குழு வெளியிட்டுள்ளது.

மோடி

நேற்று வெளியான வீடியோவில் ஜிஎஸ்டி, மோடி நாட்டு மக்களின் வங்கி கணக்குகளில் ரூ. 15 லட்சம் போடுவேன் என்றது, லிங்கா, எங்க ஊரு பாட்டுக்காரன், ஜல்லிக்கட்டு பிரச்சனை என்று பல விஷயங்களை கலாய்த்துள்ளனர்.

விஜய்

விஜய்

அது ஏன்யா ஆ, ஊன்னா எங்க விஜய் அண்ணாவையே கலாய்க்குறீங்க என்று தளபதி ரசிகர்கள் லைட்டா டென்ஷனாகியுள்ளனர்.

சிவா

யாரு மாமா இவன் நம்மள விட பயங்கரமா கலாய்க்கிறான்