ஹைதராபாத் ஹோட்டலில் விபச்சாரம் செய்து சிக்கிய இளம் நடிகை | Prostitution racket busted in Hyderabad: Actress rescued

0
0

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் விபச்சாரம் செய்த கும்பல் பிடிபட்டது. அவர்களின் இடம் இருந்து இளம் நடிகை ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று இரவு அந்த ஹோட்டலில் சோதனை நடத்தினர்.

சோதனையில் அங்கு விபச்சாரம் செய்தவர்கள் சிக்கினார்கள்.

நடிகை

விபச்சாரத்திற்கு ஏற்பாடு செய்தவர், வாடிக்கையாளரான அரசு ஊழியர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மும்பையில் இருந்து வந்த 24 வயது வளர்ந்து வரும் நடிகையை போலீசார் மீட்டனர்.

விபச்சாரம்

விபச்சாரம்

விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஆக்ராவை சேர்ந்தவர். ஹைதராபாத் ஹோட்டலில் விபச்சார தொழில் செய்து வருபவர் ஜனார்தன் ராவ். தற்போது மீட்கப்பட்டுள்ள நடிகையை விபச்சாரத்தில் தள்ளியதும் அவர் தான். முன்பும் கூட மும்பையில் இருந்து வளர்ந்து வரும் நடிகைககளை ஹைதராபாத்திற்கு அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர்.

பணம்

பணம்

தற்போது தலைமறைவாக உள்ள ஜனார்தன் ராவ் மற்றும் ஒரு குற்றவாளி மகராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த நடிகைகளிடம் நைசாக பேசி அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரூ. 1 லட்சம்

ரூ. 1 லட்சம்

வாரத்திற்கு ரூ. 1 லட்சம் தருகிறோம் என்று கூறி ஜனார்தன் ராவ் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். அவர் வாடிக்கையாளர்களிடம் தலா ரூ. 20 ஆயிரம் வாங்கி வந்துள்ளார்.

தெலுங்கு நடிகைகள்

தெலுங்கு நடிகைகள்

அமெரிக்காவில் வசித்து வரும் தெலுங்கு பட தயாரிப்பாளர் வளர்ந்து வரும் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்து போலீசில் சிக்கினார். இந்நிலையில் ஹைதராபாத் ஹோட்டலில் விபச்சாரம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.