ஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் 

0
0

சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிப்பதாகக் கூறி விளம்பரம் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹீலர் பாஸ்கர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கோவை செல்வபுரத்தைச் சேர்ந்தவர் ஹீலர் பாஸ்கர் (42). இவர் அங்கு விஷ்டை வாழ்வி யல் மையம் நடத்தி வந்தார். அவரது உறவினரான சீனிவாசன் (32) என்பவர் மேலாளராகப் பணியாற்றி வந்தார். சுகப் பிரசவத்துக்கு இலவசப் பயிற்சி அளிப்பதாக விளம்பரம் செய்த தையடுத்து, எழுந்த புகாரின் பேரில் ஹீலர் பாஸ்கர், மேலா ளர் சீனிவாசன் ஆகியோரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிடைத்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு ஹீலர் பாஸ்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் மீதான விசாரணை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. அப் போது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் 30 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஹீலர் பாஸ்கர், சீனிவாசன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி பாண்டி உத்தரவிட்டார்.