ஹன்சிகா படத்தின் தலைப்பை வெளியிடும் தனுஷ்

0
0

ஹன்சிகாவின் 50-வது படத் தலைப்பை தனுஷ் வெளியிட இருக்கிறார்.

‘ஹவா’ என்ற இந்திப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா மோத்வானி. பூரி ஜெகன்நாத் இயக்கிய ‘தேசமுடுறு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் அல்லு அர்ஜுன் ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழில் தனுஷ் ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமான ஹன்சிகா, பலருடனும் ஜோடியாக நடித்துவிட்டார். தெலுங்கு மற்றும் தமிழில் அதிகமான படங்களில் நடித்திருப்பவர், ஒரு கன்னடம் மற்றும் ஒரே ஒரு மலையாளப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய 50-வது படத்தில் நடிக்க இருக்கிறார் ஹன்சிகா. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜமீல். எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக், நாளை வெளியாக இருக்கிறது. நடிகர் தனுஷ், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட உள்ளார். செப்டம்பர் மாதம் தொடங்கும் இந்தப் படம், அடுத்த வருடம் ரிலீஸாக இருக்கிறது.