ஸ்மார்ட்போன்களில் தானாகவே வந்த ஆதார் கட்டணமில்லா தொலைபேசி எண்: பயனாளிகள் புகார்

0
0

ஸ்மார்ட்போன்களில் தானாகவே ஆதார் கட்டணமில்லா தொலை பேசி எண்கள் வந்துள்ளதாக பய னாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் அனைத்து குடிமக் களுக்கும் ஆதார் எண் வழங்கும் பணியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) செய்து வருகிறது. ஆதார் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வசதியாக நாடு முழுவதும் சேவை மையங்கள், இணையதளத்தில் திருத்தம் செய்ய வசதிகளையும் யுஐடிஏஐ செய்துள்ளது.

இந்த நிலையில் யுஐடிஏஐ-யின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800-300-1947 என்ற எண் மாற்றப்பட்டு 1947 என்ற புதிய தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் கட்டணமில்லா சேவையே ஆகும்.

இதைத் தொடர்ந்து இந்த புதிய எண்ணானது ஸ்மார்ட்போன்களில் உள்ள கான்டாக்ட் லிஸ்ட்டில் தானாகவே பதிவாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ட்விட்டர் அக்கவுன்ட் வைத்துள்ளவர்கள், ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத் தும்போது இந்த புதிய எண்ணா னது தானாகவே, அவர்களது ஸ்மார்ட்போன்களில் பதிவாகியுள் ளது. ஆதார் எண்ணைப் பெற்றவர் களுக்கும், ஆதார் எண்ணைப் பெறாதவர்களுக்கும் ஸ்மார்ட் போன்களில் இந்த எண் தானாகவே பதிவாகியுள்ளது. இதனால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

எங்களுடைய அனுமதி இல்லாமலேயே இந்த புதிய எண்ணானது ஸ்மார்ட்போன்களில் தானாகவே பதிவாகி விடுகிறது. இது எப்படி என்று ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் குழப்பத்தில் உள்ளனர். இதுதொடர்பாக பலர் யுஐடிஏஐ-க்கு கேள்வியெழுப்பி இ-மெயிலும் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக யுஐடிஏஐ விளக்கம் தரவேண்டும் என்று பிரான்ஸைச் சேர்ந்த பாதுகாப்பு நிபுணர் எல்லியட் ஆல்டர்சன் யுஐடிஏஐ-வுக்கு மெயில் அனுப்பியுள்ளார்.

ஏற்கெனவே இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் ஆர்.எஸ். சர்மா தனது ஆதார் எண்ணை வெளியிட்டு சவால் விடுத்தார். இந்த நிலையில் அவரது ஆதார் எண் மூலம் பல தகவல்களை திருடிய ஹாக்கர்கள் அவரது வங்கிக் கணக்கில் ரூ.1-ஐ அனுப்பி அவரது சவாலுக்கு பதில் தந்தனர்.

இந்த நிலையில் தற்போது கட்டணமில்லா தொலைபேசி எண் தானாகவே ஸ்மார்ட்போன்களில் பதிவாகும் சர்ச்சை எழுந்துள்ளது யுஐடிஏஐ அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே ஆதார் சேவை கட்டணமில்லா எண்ணை ஸ்மார்ட்போன்களில் சேர்க்குமாறு ட்விட்டர் நிறுவனத்தையோ, செல்போன் சேவை நிறுவனங்களையோ கேட்கவில்லையென்று யுஐடிஏஐ விளக்கம் அளித்துள்ளது.