ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது: கடம்பூர் ராஜு

0
0

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது,

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில், அரசின் நடவடிக்கையில் தலையிட முடியாது. மீண்டும் ஆலையை திறப்பதற்கான உத்தரவை வழங்க முடியாது. அங்கு நிர்வாக ரீதியான பணியை செய்து கொள்ளலாம் என்றுதான் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெளிவான உத்தரவை பிறப்பித்து உள்ளது.

நிர்வாக ரீதியான பணியை மேற்கொள்ள அனுமதி அளித்து இருப்பது தொடர்பாக மேல்முறையீடு செய்வது குறித்து சட்டரீதியாக ஆலோசனை செய்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார். மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் தருவதற்கு சட்ட சிக்கல் இருந்து வந்தது. இதனை சுட்டிக்காட்டிய போது, ஒரு மணி நேரத்தில் அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டது. இதனால் சட்டசிக்கலை உருவாக்கியவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.