ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க முதலீடு பணத்திற்கு வரி விலக்கு அளிக்க முடிவு…! | Startups with up to Rs 10 crore investment will get Tax concession

0
0

இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்குவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக 10 ரூபாய் வரை முதலீடு செய்து ஆரம்பிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த 10 கோடி ரூபாய் வரம்பானது முதலீட்டாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மூலமாகப் பெறும் முதலீடும் அடங்கும்.

பங்கு பிரீமியம் மீதான வருமான வரி விலக்குப் பிரிவு 56 ன் கீழ் தகுதியுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளது.

அறிவிப்பு

காமர்ஸ் மற்றும் தொழில் துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏஞ்சல் முதலீட்டாளர் ஒருவர் 2 கோடி ரூபாய் அல்லது ஆண்டு வருவாய் 25 லட்சம் வரை ஸ்டார்டஅப் நிறுவனத்தில் முதலீடு செய்து பெறும் போது 100 சதவீதம் வரை முதலீட்டின் மீது வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

இந்த மசோதா திருத்தங்களை ஸ்டார்ப்அப் நிறுவனங்களுக்காகச் செய்ததன் மூலம் ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்களுக்கு எளிதாக நிதியைத் திரட்ட உதவும் மற்றும் அதிக வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று தொழிலாளர் துறை அமைச்சக தெரிவித்துள்ளது.

முன்பு எப்படி இருந்தது

தொழிலாளர் துறை இந்தச் சட்ட திருத்தங்களைச் செய்யாததற்கு முன்பு வருமான வரி சட்டப் பிரிவு 56-ன் கீழ் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்த நிதிகள் குறித்து நோட்டிஸ் அனுப்பப்பட்டு வந்துள்ளது.

எப்படிச் சலுகைகளைப் பெறுவது?

ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சலுகைகளைப் பெற இண்டர் மினிஸ்ட்ரியல் சர்ட்டிபிகேஷன் போர்டை அனுக வேண்டும். இதற்கான கெசட் அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க