ஷங்கரின் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர்…! | Indian 2 movie update!

0
0

சென்னை: கமல்ஹாசனின் அடுத்த படமான இந்தியன் 2வில், அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 திரைப்பட ரிலீஸ் வேலைகளில் பிசியாக உள்ளார். ஆகஸ்ட் 10ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பிரமிட் சாய்மிரா நிறுவனம் படத்திற்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இதனால் படம் அறிவித்தபடி ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான வெற்றித் திரைப்படமான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்போது இப்படத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் நடைபெற்ற விஸ்வரூபம் 2 திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியில், இந்தியன் 2 திரைப்படத்தில் அஜய் தேவ்கன் இருக்கிறாரா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, அது இயக்குனரின் முடிவு என கமல் கூறியுள்ளார்.

அதனால் இந்தியன் 2 வில் அஜய் தேவ்கன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என நம்பப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் இப்போது எந்திரன் 2.0 திரைப்பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அது முடிந்தவுடன் இந்தியன் 2 பட வேலைகள் ஆரம்பமாகும்.