வேல முடிச்சு வீட்டுக்கு வந்ததும் உடம்பு வலி சும்மா பின்னி எடுக்குதா? நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது? | 14 Home Remedies To Treat Body Aches

0
0

உடல் வலி எதனால் உண்டாகிறது?

பொதுவாக உடல் வலி என்பது நம் உடலுக்குள் இருக்கும் பாதிப்புகளின் அறிகுறி தான். பொதுவாக இந்த உடல் வலி பெரிதாக எந்த ஒரு தீங்கையும் உண்டாக்குவதில்லை, என்றாலும் சிகிச்சைக்கு முன்னர், இந்த வலிக்கான காரணத்தை அறிந்து கொள்வது நல்லது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

உடல் வலி உண்டாவதற்கான சில பொதுவான அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மனஅழுத்தம்

நீர்சத்து குறைபாடு

போதுமான அளவு தூக்கமின்மை

நிமோனியா

கீல்வாதம்

நாள்பட்ட சோர்வு நோய்க்குறி

நுண்ணுயிர் தொற்றால் உண்டாகக்கூடிய காய்ச்சல் மற்றும் சளி இரத்த அழுத்த சிகிச்சைக்காக பயன்படுத்தும் சில வகை மருந்துகள் உடலில் நீர் தங்குதல் – உங்கள் உடலில் அதிகமான அளவு நீர் சேர்வதால், தசைகள் வீக்கமுற்று, நரம்புகளுக்கு ஒரு வித அழுத்தம் உண்டாகிறது. இதனால் உடல் வலி உண்டாகிறது. ஹைபோகலிமியா என்னும் இரத்த பொட்டசிய குறை போன்ற பிரச்னைகள் உண்டாக வாய்ப்புண்டு.

உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்கள் மூலமாகவே எளிதான முறையில் இந்த உடல் வலிகளைப் போக்க முடியும். உங்கள் உடலில் உண்டாகும் வலியை உடனடியாகப் போக்க பயன்படும் சில தீர்வுகள் இதோ உங்களுக்காக.. உடல் வலியைப் போக்க சில இயற்கை வழிகள்

கீழே 14 வகையான தீர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி உங்கள் உடல் வலியை எளிதில் குறைக்கலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

தேவையான பொருட்கள்:

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர்

தேன்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த நீரில் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும்

நீங்கள் குளிக்கும் பாத் டப்பில் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து சிறிது நேரம் அந்த நீரில் மூழ்கி இருந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை இதனை செய்யலாம். ஆப்பிள் சிடர் வினிகருக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் நுன்னுயிர் எதிர்ப்பு தன்மைகள் உண்டு. இதனால் வலி மற்றும் வீக்கம் குறைகிறது.

குளிர் ஒத்தடம்

குளிர் ஒத்தடம்

ஒரு ஐஸ் பேக்

உடல் வலி உள்ள இடங்களில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.

ஒரு 10 நிமிடம் அப்படியே விட வேண்டும். பின்பு இதே முறையை இரண்டு அல்லது மூன்று தடவை பின்பற்றலாம்.

இந்த தீர்வை நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை பின்பற்றலாம். ஐஸ் ஒத்தடம் கொடுப்பதால், வலி பாதிக்கப்பட்ட இடத்தில் தற்காலிகமாக நரம்பு செயல்பாடு குறைகிறது. இதனால் வலியும் குறைகிறது. இந்த தீர்வு, உடல் வலியிலிருந்து தற்காலிக ஆனால் விரைவான தீர்வை அளிக்கிறது,

இஞ்சி

இஞ்சி

1-2 இன்ச் நறுக்கிய இஞ்சி

ஒரு கப் தண்ணீர்

தேன் சிறிதளவு

இஞ்சியைத் துருவி ஒரு கப் தண்ணீரில் சேர்க்கவும். இந்த நீரை பாத்திரத்தில் விட்டு நன்றாக கொதிக்க விடவும். ஐந்து நிமிடம் கழித்து இறக்கி வடிகட்டவும். இந்த வடிகட்டிய நீரில் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும். சூடாக இருக்கும்போதே இதனைப் பருகுவது நல்லது.

ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த இஞ்சி தேநீரை பருகலாம். இஞ்சியில் தாவர வேதியல் தன்மை அதிகமாக உள்ளது. இதனால் சுகாதார ஊக்குவிப்பு நன்மைகளை அதிகமாக தருகிறது. இஞ்சி, அழற்சி எதிர்ப்பு தன்மையும், வலி நிவாரணத் தன்மையும் அதிகம் பெற்றுள்ளதால், அடிக்கடி உடலில் உண்டாகும் வலியைப் போக்க சிறந்த முறையில் உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சள்

ஒரு ஸ்பூன்

மஞ்சள் தூள்

ஒரு கிளாஸ் சூடான பால்

ஒரு கிளாஸ் சூடான பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பால் சிறிது ஆறியவுடன் அதில் சிறிதளவு தேன் சேர்க்கவும்.

இந்த கலவையை உடனடியாக பருகவும்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஒரு முறை தினமும் இதனை பருகலாம். உடல் வலியைப் போக்குவதில் சிறந்த பலன் அளிப்பது இந்த மஞ்சள். அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி, மற்றும் குணப்படுத்தும் தன்மை போன்றவற்றைக் கொண்டிருப்பதால், உடல் வலியை எதிர்த்து போராடி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு தன்மையையும் அதிகரிக்கிறது.

லவங்கப் பட்டை

லவங்கப் பட்டை

ஒரு ஸ்பூன் லவங்கப் பட்டை தூள்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர்

தேன்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீருடன் ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டை தூளை சேர்க்கவும். இந்த கலவையை நன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு தேன் சேர்க்கவும். தேனை கலந்தவுடன் இதனைப் பருகவும்.

இந்த கலவையை நீங்கள் தினமும் ஒரு முறை பருக வேண்டும். பல்வேறு உணவுகளில் நறுமனத்திற்காக சேர்க்கப்படும் ஒரு மசாலாப் பொருள் லவங்கப்பட்டை. இந்த லவங்கப் பட்டையில் சக்தி மிக்க அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி, மற்றும் குணப்படுத்தும் தன்மைகள் உள்ளன. இதனால் இதனை உடல் வலிக்கான தீர்வுகளில் பயன்படுத்தி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தினை அதிகரிக்கலாம்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய்

ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள்

ஒரு கப் வெதுவெதுப்பான நீர

தேன் சிறிதளவு

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்க்கவும்.

நன்றாகக் கலந்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்க்கவும்.

பிறகு இந்த கலவையைப் பருகவும். தினமும் இந்த கலவையை ஒன்று அல்லது இரண்டு முறை பருகலாம். வலியுணர்வைத் தடுக்கும் தன்மை, மிளகாயில் உள்ள காப்சிசின் என்ற கூறுக்கு உண்டு. இது இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து வலியுடன் போராடுகிறது. இது இயற்கையாகவே வலியைக் குறைக்க உதவுகிறது.

ரோஸ்மேரி

ரோஸ்மேரி

ஒரு ஸ்பூன் ரோஸ்மேரி டீ

ஒரு ஸ்பூன் வெந்நீர்

தேன்

ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் ரோஸ்மேரி டீயை சேர்க்கவும்.

டீ நன்றாக நீரில் இறங்கியவுடன் அதனை வடிகட்டிக் கொள்ளவும். இந்த டீயில் சிறிதளவு தேன் சேர்த்து உடனடியாக பருகவும். ரோஸ்மேரி எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து மசாஜ் செய்வதால் கூட உடல் வலி குறையும். தினமும் மூன்று முறை ரோஸ்மேரி தேநீர் பருகலாம். உடல் வலியை சிறப்பாக எதிர்த்து போராடும் தன்மை கொண்ட ஒரு மூலிகை ரோஸ்மேரி. ரோஸ்மேரியில் இருக்கும் இயற்கையான அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணத் தன்மை காரணமாக உடல் வலி உடனடியாகக் குறைகிறது.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

சிறிதளவு கடுகு எண்ணெய்யை எடுத்து உடல் முழுவதும் மசாஜ் செய்யவும். 30 அல்லது 40 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும்.

பின்பு குளிக்கவும். தினமும் ஒரு முறையாவது இதனை பின்பற்றலாம். விடாப்பிடியான உடல் வலியைக் குறைக்க உதவும் மற்றொரு சிறந்த பொருள் கடுகு எண்ணெய். இந்த எண்ணெயில் அல்லில் ஐசோதியோசியனேட் என்னும் கூறு உள்ளது. இது அழற்சியால் உண்டாகும் வலியைக் குறைக்க உதவுகிறது.

வாழைப்பழம்

வாழைப்பழம்

உங்கள் தினசரி உணவில் வாழைப்பழத்தை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் மூன்று அல்லது நான்கு வாழைப்பழங்கள் எடுத்துக் கொள்ளலாம். பலருக்கு உடல் வலி உண்டாவதற்கான காரணம் பொட்டாசியம் குறைபாடு. இந்த குறைபாட்டை சீராக்கவும், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கவும், தினமும் வாழைப்பழத்தை உட்கொள்வது மிகவும் அவசியம்.

செர்ரி

செர்ரி

ஒரு கிளாஸ் இனிப்பு சேர்க்கப்படாத செர்ரி ஜூஸ். தினமும் ஒரு கிளாஸ் இனிப்பு சேர்க்கப்படாத செர்ரி ஜூஸ் பருக வேண்டும். சிறந்த தீர்வுகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்த செர்ரி சாற்றை பருகலாம். வீக்கத்தால் உண்டான வலியைக் குறைக்க செர்ரி சாறு உதவுகிறது. இதனால் தசை வலிக்கான சிகிச்சை, புற நரம்பு சிகிச்சை போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெய்

12 துளிகள் லாவெண்டர் எண்ணெய்

30மிலி தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் லாவெண்டர் எண்ணெய்யைக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் உடல் முழுவதும் மென்மையாக மசாஜ் செய்யவும். 30 அல்லது 40 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். தினமும் ஒரு முறை இதனைச் செய்யலாம். வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு தன்மை ஆகியவை உடல் வலி மற்றும் அழற்சியைக் குறைத்து உடலை வலிமையாக்குகிறது.

புதினா எண்ணெய்

புதினா எண்ணெய்

12 துளிகள் புதினா எண்ணெய்

30 மிலி தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்

புதினா எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். வலி உள்ள இடத்தில் இந்த கலவை கொண்டு மென்மையாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் ஊறிய பின்பு குளிக்கவும். ஒரு நாளில் ஒரு முறை இதனைச் செய்யலாம்.

புதினா எண்ணெய்யில் வலி குறைக்கும் தன்மை, அழற்சி எதிர்ப்பு தன்மை, வலி நிவாரணி தன்மை போன்றவை உள்ளதால் பல்வேறு கோளாறுகளைப் போக்கவும் இந்த எண்ணெய் பயன்படுகிறது. இது பொதுவாக உடல் வலியைத் தூண்டும் தசை பிடிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு

ஒரு கப் எப்சம் உப்பு

தண்ணீர்

வெதுவெதுப்பான நீர் நிறைந்த பாத் டப்பில் ஒரு கப் எப்சம் உப்பு சேர்க்கவும். உப்பு நீரில் கரைந்தவுடன், அந்த நீரில் 20 முதல் 30 நிமிடங்கள் மூழ்கி இருக்கவும்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதனை செய்து வரலாம். எப்சம் உப்பில் மெக்னீசியம் அதிகம் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட கனிமம் என்பதால், வலி நிறைந்த தசை மற்றும் உடல் பகுதிக்கு விரைந்து நிவாரணம் அளிக்கிறது.

உடல் மசாஜ்

உடல் மசாஜ்

ஒரு தொழில்முறை உடல் மசாஜ் செய்து கொள்வதால் தசை இறுக்கம் குறைந்து நிவாரணம் பெற உதவுகிறது, இதனால் உங்கள் தசைகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. எந்த ஒரு சிகிச்சையை விடவும் சிறந்த தீர்வை உடல் மசாஜ் தருவதாக பெய்ன் மெடிசின் என்ற பத்திரிகை நடத்திய ஒரு ஆய்வு கூறுகிறது.

வைட்டமின்

வைட்டமின்

உடல் இயல்பாக இயங்குவதற்கு பல்வேறு வைட்டமின்கள் தேவைப்படுகிறது. வைட்டமின் பி1, டி, ஈ ஆகியவற்றின் குறைபாடு, நரம்பு மற்றும் தசைகளில் சேதத்தை உண்டாக்கலாம். இதன் விளைவாக, தசை பலவீனம் மற்றும் வலி உண்டாகலாம். அதனால், வைட்டமின் மற்றும் இதர ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவை தினசரி எடுத்துக் கொள்வதால், உடல் வலி தவிர்க்கப்படும். மேலும் மருத்துவரின் பரிந்துரைப்படி வைடமின் மாத்திரைகளும் எடுத்துக் கொள்ளலாம்.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

போதுமான அளவு ஓய்வெடுங்கள். நீர் மற்றும் இதர திரவ பொருட்களை அதிகம் பருகுங்கள். வெதுவெதுப்பான நீரில் தினமும் குளியுங்கள். அதிக வெப்பம் அல்லது அதிக குளிர், எந்த நாட்களிலும் உங்கள் உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளுங்கள்.

உடல் வலி நீடித்து இருப்பதால் ஒரு வித சோர்வு நம்மை ஆட்கொள்ளும். ஆகவே இதற்கான தீர்வுகள் மூலம் இவற்றை விரைந்து சரி செய்ய வேண்டும். ஆகவே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள தீர்வுகள் நிச்சயம் உங்களுக்கு உதவும். இது தவிர வேறு முறைகளில் உடல் வலியைப் போக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் எங்களுடன் அந்த செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.