வெளியே வரட்டும் மகத்தை பழிவாங்காமல் விட மாட்டேன்: காதலி பிராச்சி | Prachi trusts Mahat but wants to extract revenge

0
0

சென்னை: மகத் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பழிவாங்கப் போவதாக அவரின் காதலி பிராச்சி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மகத் பிக் பாஸ் 2 வீட்டில் யாஷிகாவுடன் சேர்ந்து லூட்டி அடித்தாலும் அவர் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார் அவரின் காதலியான பிராச்சி மிஸ்ரா. மகத்தும், யாஷிகாவும் வெறும் நண்பர்கள் தான் என்று பிராச்சி தெரிவித்துள்ளார்.

மகத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து பிராச்சி கூறியதாவது,

பிக் பாஸ் 2

நான் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்திருக்கிறேன். என் நண்பர்கள் சிலர் அதில் பங்கேற்றனர். ஆனால் மகத் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வார் என்று நினைக்கவில்லை. அவர் ரொம்ப எமோஷனல் டைப், சண்டைகள், விவாதங்களை வெறுப்பவர். அவருக்கு பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வரும். அதனாலேயே அவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கக் கூடாது. ஒரு காதலியாக நான் அவரை ஆதரிக்கிறேன். அதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதித்தேன்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மகத்தால் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடிக்க முடியாமல் 10 நாட்களில் வந்துவிடுவார் என்று நினைத்தேன். அவர் இத்தனை நாட்கள் தங்கியதில் மகிழ்ச்சி. நாங்கள் பார்ட்டிக்கு சென்றால் நான் மற்றவர்களும் சேர்ந்து டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பேன். அவர் ஒரு ஓரமாக அமர்ந்திருப்பார். அவரை சுற்றி பெண்கள் உட்கார்ந்திருப்பார்கள். சில ஆண் நண்பர்களுடன் இருக்கும்போது தான் பாதுகாப்பாக உணர முடியும். மகத் அத்தகைய ஆண் நண்பர்.

வயது

வயது

பிக் பாஸ் வீட்டில் மகத் வயதில் பெண்கள் தான் உள்ளார்கள். அதனால் அவர் அவர்களுடன் இருக்கிறார். யாஷிகா புகார் கூறினாரா? இல்லையே. யாருமே புகார் தெரிவிக்கவில்லை. மகத் பற்றி வெளியாகும் செய்திகளை பார்த்து முதலில் அவரது அம்மா ரொம்ப வருத்தப்பட்டார். நான் பிக் பாஸ் வீட்டில் இருந்திருந்தால் மகத் போன்று தான் இருந்திருப்பேன். எத்தனை நாள் நடிக்க முடியும்? ஒரு நாள் உண்மை முகம் வெளியே வந்து தான் ஆக வேண்டும். மகத் யார் பின்னாலும் பேச மாட்டார். அவர் கோபக்காரர் என்பது போட்டியாளர்களுக்கும் புரிந்துவிட்டது.

யாஷிகா

யாஷிகா

மகத் சூதானமாக இருந்தால் நிச்சயம் பிக் பாஸ் டைட்டிலை வெல்வார். எனக்கு டேனி நடந்து கொள்ளும் விதம் பிடித்துள்ளது. பிக் பாஸ் டைட்டிலை வெல்ல யாஷிகாவுக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பு தான் மகத்திற்கு 10 ஜீன்ஸ், சட்டைகள், காலணிகள் வாங்கினோம். ஒரு மாதம் கழித்து பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இருந்து போன் வந்தது. மகத்திற்கு உடைகள் வேண்டுமாம், புதிதாக வாங்கிக் கொடுக்குமாறு கேட்டார் என்றார்கள். இருக்கும் உடைகளை துவைத்து போடுமாறு யாராவது சொல்லுங்க ப்ளீஸ். அவர் வெளியே வந்த பிறகு பழிவாங்கிவிடுவேன் என்றார் பிராச்சி.