வீல் சேரில் இருந்தபோது இது இதை தான் ரொம்ப மிஸ் பண்ணினேன்: டிடி உருக்கம் | What did DD miss the most during her wheel chair days?

0
0

சென்னை: தான் வீல் சேரில் இருந்தபோது மிஸ் பண்ணியது எது என்று தெரிவித்துள்ளார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி.

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரேக் எடுத்தார். முழங்காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் படுத்த படுக்கையானார்.

இனி அவரால் நடக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

டான்ஸ்

இனி நடக்கவே முடியாது என்று டாக்டர்கள் கூறிய பிறகும் தனது மன உறுதியால் எழுந்து நடந்தது மட்டும் அல்ல மீண்டும் நடனம் ஆடத் துவங்கிவிட்டார் டிடி.

எங்கிட்ட மோதாதே

எங்கிட்ட மோதாதே

தான் குணமடைந்த பிறகு விஜய் டிவியின் எங்கிட்ட மோதாதே நிகழ்ச்சிக்காக தான் அவர் முதன்முதலாக மேடையில் ஆடினார். அந்த தருணத்தை தன்னால் மறக்கவே முடியாது என்று தெரிவித்தார்.

டிடி

டிடி டான்ஸ் ஆடிய வீடியோவை ட்விட்டரில் போட்டு இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் அக்கா என்று ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

வீல் சேர்

ரசிகரின் ட்வீட்டை பார்த்த டிடி கூறியிருப்பதாவது, எனக்கு டான்ஸ் ஆடுவது பிடிக்கும். வீல் சேரில் இருந்தபோது இதை தான் அதிகம் மிஸ் செய்தேன். என்னால் முடியும் என்றால் அனைவராலும் முடியும். எத்தனை முறை விழுந்தாலும் எழ வேண்டும் என்றார்.