வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறிய சிறுமிகள்: கடத்தல் கும்பலிடம் சிக்கிய பரிதாபம்

0
0

உத்தரப் பிரதேசத்தில் வீட்டில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வெளியேறிய சிறுமிகள் கடத்தல் கும்பலிடம் சிக்கினர். அவர்களை போலீஸார் பின்னர் மீட்டனர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் சுபாக் சந்திரா சாக்கியா தெரிவித்ததாவது:

வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறிய மூன்று சிறுமிகள் பணத்திற்காக பெண்களை கடத்தி விற்கும் கும்பலிடம் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அந்த சிறுமிகளை  கடத்தியிருப்பதாக எங்களுக்கு துப்பு கிடைத்தது.

இதையடுத்து ஷாஜகான்பூரில் சுரேஷ் குமார் என்பவரின் வீட்டுக்கு சென்று சோதனை செய்தோம். அங்கிருந்து சிறுமிகளை மீட்டு கடத்திய நால்வரையும் கைது செய்தோம்.

நாங்கள் அங்கு சென்றபோது, ஒரு சிறுமியை அந்த கும்பல் ஏற்கெனவே விற்றுவிட்டது தெரிந்தது. மற்ற இருவரையும் விற்பதற்கு தயாராகிக்கொண்டிருந்தனர். கைதான சிறுமிகள் அடையாளம் காணப்பட்டனர். மூவரும் தற்போது மருத்துவ சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.