விஸ்வரூபம் 2: ஜவ்வாய் இழுத்த முதல்பாதி, ஓவராக பீட்டர் விட்ட கதாபாத்திரங்கள் #Vishwaroopam2 | Viswaroopam 2 first half is dragging

0
0

சென்னை: விஸ்வரூபம் முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாகம் ரொம்பவே சுமார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

கமல் ஹாஸன் இயக்கி, நடித்த விஸ்வரூபம் 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வெளியாகவில்லை.

இரண்டாம் பாகம் 5 ஆண்டுகள் கழித்து வந்தாலும் மக்கள் முதல் பாகத்தை இன்னும் மறக்கவில்லை என்பது தெரிகிறது. முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது படம் ரொம்பவே சுமார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

படத்தை பார்த்த நம் செய்தியாளர் கூறுகையில், முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்தில் ஆக்ஷன் காட்சிகள் விறுவிறுப்பாக இல்லை. முதல் பாதி ஆமை வேகத்தில் நகர்ந்தது. போர் அடித்தது. படத்தில் ஏகப்பட்ட ஆங்கில வசனங்கள்.

ஸ்டண்ட் காட்சிகள் மக்களை கவரவில்லை என்றார். குறுகிய நேரத்தில் நிறைய விஷயங்களை சொல்ல முயன்று தடுமாறியிருக்கிறார் கமல் ஹாஸன் என்றே விமர்சனம் எழுந்துள்ளது.