விஸ்வரூபம் 2-க்கு தடைகோரிய வழக்கு.. கமலுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு.. ஆக. 6ம் தேதிக்குள்! | August 6 is deadline for Kamal! Says High court!

0
0

சென்னை: விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடைகோரிய வழக்கில் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் புரமோஷன் மற்றும் ரிலீஸ் வேலையில் தீவிரமாக கமல் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், மர்மயோகி திரைப்படத்தை பிரமிட் சாய்மிராவுடன் இணைந்து தயாரிப்பதாக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, கமல் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.5.44 கோடியை திருப்பி செலுத்தாமல் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பிரமிட் சாய்மிரா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென கமல்ஹாசன் மற்றும் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு காலக்கெடு விதித்துள்ளது.

மர்ம யோகி திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காகப் பெற்ற ரூ. 6.90 கோடியை கமல்ஹாசன் திருப்பி செலுத்தவில்லை என ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இப்போது இரண்டாவது வழக்கு பிரமிட் சாய்மிரா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.