விவாகரத்தான முஸ்லிம் பெண்ணுக்கு பராமரிப்புத் தொகை: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

0
0

விவாகரத்தான முஸ்லிம் பெண் களுக்கு பராமரிப்பு தொகை அளிக்க தேவைப்பட்டால் நீதிமன்றம் உத்தரவிடுவதை தடுக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார். விவாகரத்து வழங்கிய விசாரணை நீதிமன்றம், அவர் தனது மனைவிக்கு விவாகரத்துக்குப் பின் பராமரிப்புத் தொகையும் அவர்களது சொத்தில் பாதியும் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முஸ்லிம் திருமண விவா கரத்து சட்டத்தில் பெண்ணுக்கு பராமரிப்பு தொகை மற்றும் திருமண வாழ்க்கை சொத்துரிமை பற்றி குறிப்பிடவில்லை என்று மனுவில் தெரிவித்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஷாலினி பன்சல்கார் ஜோஷி, ‘‘முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டத்தில் விவாகரத்தான பெண்ணின் பராமரிப்பு தொகை மற்றும் சொத்துரிமை பற்றி குறிப் பிடப்படாவிட்டாலும் தேவைப்பட் டால் நீதிமன்றம் நிவாரணம் வழங் கும். விவாகரத்தான முஸ்லிம் பெண்களுக்கு பராமரிப்பு மற்றும் சொத்துரிமை வழங்க நீதிமன்றம் உத்தரவிடுவதை தடுக்க முடியாது. விசாரணை நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கி உள்ளது’’ என்று தீர்ப்பளித்தார். மனு தள்ளுபடி செய்யப்பட்டது.