விரைவில் ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் நம்பர் 1 ஆக இருக்கும் முகேஷ் அம்பானி..! | Mukesh Ambani Kick Out Jack Ma as Asia’s richest person

0
0

முகேஷ் அம்பானி

நடப்பு நிதி ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி தனது பெட்ரோகெமிக்கல் வணிகம், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிற வணிகங்களில் முதலீட்டினை அதிகரித்ததன் மூலமாக 4 பில்லியன் டாலரினை கூடுதலாகத் தனது செல்வ மதிப்பில் சேர்த்துள்ளார்.

வணிகங்கள்

அம்பானி வசம் உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையம், மிகப் பெரிய அளவில் இணையதளச் சேவைப் பயன்படுத்தும் ஜியோ நெட்வொர்க் மற்றும் மிகப் பெரிய ரீட்யில் பிரிவு போன்றவை உள்ளது.

ஆண்டுப் பொதுக் கூட்டம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கையினை 215 மில்லியனாக அதிகரிப்பது, ஆன்லைன் டூ ஆப்லைன் இ-காமர்ஸ் வர்த்தகத்தினைத் துவங்குவது போன்ற திட்டங்களின் மூலம் அமேசான், வால்மார்ட், அலிபாபா போன்ற நிறுவனங்களைப் பீதியடைய வைத்துள்ளார்.

ஜியோ ஜிகா பைபர்

மேலும் இந்தியாவின் 1,100 இந்திய நகரங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவை மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவை, தொலைக்காட்சி சேவை போன்றவையும் அளிக்க உள்ளார்.

100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் நடைபெற்ற சில நாட்களில் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் படைத்த நிறுவனம் என்ற இடத்தினைப் பிடித்துள்ளது.

சொத்து

ரிலையன்ஸ் நிறுவத்தின் தலைவராக இருந்த திருபாய் அமபானி 2002-ம் ஆண்டு இறந்த பிறகு அந்தப் பொறுப்பினை முகேஷ் அம்பானி ஏற்று வழிநடத்தி வந்த நிலையில் 2005-ம் ஆண்டுப் பல சர்ச்சைகளுக்கு இடையில் அனில் அம்பானியுடன் சொத்தை இரண்டாகப் பகிர்ந்துகொண்டார்.

ஃபோர்ப்ஸ்

ஃபோர்ப்ஸ் பட்டியல் படி ஜாக் மாவின் செல்வ மதிப்பு 40.6 பில்லியன் டாலார உள்ள நிலையில், முகேஷ் அம்பானியின் செல்வ மதிப்பு 45.3 பில்லியன் டாலராக உள்ள நிலையில் ஆசியன் மிகப் பெரிய கோடீஸ்வரர் தான் என்பதை அம்பானி உறுதி செய்துள்ளார்.