விருதே விருது தருதே… வருதே நினைவில் வருதே… கலைஞரை நினைவுகூரும் விவேக்! | Actor Vivek shares his memorable picture with Kalaignar!

0
1

சென்னை: நடிகர் விவேக் கலைஞரிடம் விருது வாங்கிய புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விவேக் மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மீது மிகுந்த மரியாதை கொண்டவர்.

கடந்த 7ஆம் தேதி மு.கருணாநிதி இயற்கை எய்தினார். அதனையடுத்து அவருடன் உள்ள நட்பு, அவரிடம் பெற்ற பாராட்டு, அவருடன் உள்ள தொடர்பு பற்றி பிரபலங்கள் பலரும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் விவேக் மு.கருணாநிதியின் கையால் விருது வாங்கிய புகைப்படத்தை பதிவிட்டு..

விருதே விருது தருதே… வருதே நினைவில் வருதே என பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் விபி.விஜி இயக்கத்தில் விவேக் கதாநாயகனாக நடித்திருக்கும் எழுமின் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பதோடு நிறுத்திவிடாமல், க்ரீன் கலாம் என்ற பெயரில் மரக்கன்றுகள் நடுவதோடு, அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.