விமலுக்கு கன்னிராசிதான்…! வரலட்சுமியுடன் இணைந்துவிட்டாரே…! | Varalakshmi team up with Vimal for Kannirasi!

0
0

சென்னை: நடிகர் விமல், வரலட்சுமி இணைந்து நடிக்கும் கன்னிராசி திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் விமலுடன் வரலட்சுமி ஜோடியாக நடிக்கும் திரைப்படம் கன்னி ராசி. இப்படத்தில் பாண்டியராஜன், காளி வெங்கட், ரோபோ சங்கர், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எப்போதுமே நடிப்புக்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வித்தியாசமான கதைகளை தேடி தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை வரலட்சுமி. அவரின் மாறுபட்ட தோற்றத்தில் விஷாலின் சண்டக்கோழி 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. விஜயின் சர்க்கார் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கன்னிராசி திரைப்படம், கிராமத்து மனம் வீசக்கூடிய ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக தயாராகி வருகிறது. மன்னர் வகையறாவில் விமல் ரோபோ சங்கர் காமெடி எடுபட்டது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் யோகிபாபு இருப்பார் என இப்படத்தை எதிர்பார்க்கலாம். இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

நடிகர் விமலுக்கு மன்னர் வகையறா திரைப்படத்தைத் தொடர்ந்து கன்னிராசி வெளியாக உள்ளது. கலைவாணி 2 திரைப்படத்திலும் அவர் நடித்துவருகிறார்.