விக்ரம் மகன் சென்ற கார் மோதி 3 ஆட்டோக்கள் சேதம்: போலீசார் விசாரணை | Dhruv Vikram involved in car accident

0
0

சென்னை: நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் சென்ற கார் மோதியதில் 3 ஆட்டோக்கள் சேதம் அடைந்துள்ளன.

நடிகர் விக்ரமின் மகன் அப்பா வழியில் நடிக்க வந்துள்ளார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா மூலம் த்ருவ் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தை விக்ரமுக்கு ராசியான பாலா இயக்கி வருகிறார். இந்நிலையில் த்ருவ் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்றுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காவல் ஆணையர் வீட்டிற்கு அருகே சென்றபோது அவரது கார் விபத்துக்குள்ளானது.

Dhruv Vikram involved in car accident

த்ருவின் கார் மோதி அங்கிருந்த 3 ஆட்டோக்கள் சேதம் அடைந்துள்ளன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Dhruv Vikram involved in car accident

சென்னையில் பிரபலங்கள் வீட்டு பிள்ளைகள் கார் விபத்தில் சிக்குவது வழக்கமாகிவிட்டது.