விக்ரமை இயக்குகிறாரா எச்.வினோத்? அப்போ தல படம் என்னப்பா ஆச்சு…? | Vikram next with H.Vinoth?

0
0

சென்னை: தீரன் அதிகாரம் ஒன்று திரைப்பட இயக்குனர் எச்.வினோத் நடிகர் விக்ரமுடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் இப்போது, சாமி 2 திரைப்படம் ரிலீஸ் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். கவுதம் மேனனின் இயக்கத்தில் துருவநட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படங்களை இயக்கிய எச்.வினோத்துடன் இணையப்போவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இதற்கிடையில், விஸ்வாசம் திரைப்படத்திற்குப் பிறகு எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தாயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டது.

இப்போது, அஜித் நடிக்கும் திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பாக, விக்ரம் நடிக்கும் திரைபப்டத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. விக்ரம் ஏற்கனவே தூங்காவனம் இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வாவின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சாமி திரைப்பட ரிலீஸுக்குப் பிறகு அப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கும் நேரத்தில் எச்.வினோத் விக்ரம் கூட்டணி தொடர்பானத் தகவல் வந்துள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

விக்ரம்