வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழை வாய்ப்பு

0
0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ”வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை நீடிக்கவும் வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் கடலோர பகுதி மற்றும் வங்கக் கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.