வாஜ்பாயின் உடல்நிலையின் தற்போதைய நிலைமை என்ன

0
21

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளார் என எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவர் தொடர்ந்து மருத்துவ குழுவால் கண்காணிக்கப்படுவதாகவும் , வாஜ்பாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவித்தது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வாஜ்பாய் உடல்நலத்துடன் உள்ளார். தொடர் சிகிச்சையால் வாஜ்பாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.