வாஜ்பாயின் ‘இந்திய ஒளிர்கிறது” என்பது போல மோடியின் பொருளாதாரமும் தோற்றுப்போகும்: சு சுவாமி | Modi’s Economics To Fail As Vajpayee’s ‘India Shining’, Says Subramanian Swamy

0
0

ஓட்டு கிடைக்காது

பொருளாதார வல்லுநர் மற்றும் புள்ளியியலாளரான சுப்பிரமணியன் சுவாமி பாஜகவிற்குப் பொருளாதார வளர்ச்சியால் ஓட்டு கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளார். வாஜ்பாய் இந்தியா ஒளிர்கிறது என்று தோல்வி தான் அடைந்தார் என்று கூறியுள்ளார்.

2014 வெற்றி

மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமியை பொறுத்தவரையில் 2014-ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது பாஜக வெற்றிபெற முக்கியக் காரணங்களாக இருந்தது இந்துத்துவா மற்றும் ஊழல் அற்ற ஆட்சி என்பதே காரணம் ஆகும்.

பிராச்சாரம்

ஆனால் 2014-ம் ஆண்டுத் தேர்தல் பிரச்சாரங்களில் மோடி பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்குதல், உழல் இல்லா இந்தியா போன்றவற்றை முன்னிறுத்தி தான் பேசியுள்ளார். இந்துவா அல்லாது ராமர் கோவில் பற்றி எல்லா எங்கும் குறிப்பிடவில்லை.

முக்கியச் சீர்திருத்தங்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இது வரை சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மற்றும் ஐபிசி எனப்படும் திவால் சட்டம் என இரண்டு முக்கியச் சீர்திருத்தங்களைச் செய்துள்ளது.

அதில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்து இருந்தாலும் எளிமையானதாக இல்லை, இன்னும் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. ஐபிசி திவால் சட்டம் இப்போது தான் துவங்கியுள்ளது. இவை இரண்டும் இந்திய பொருளாதாரத்திற்கான முதுகெலும்புகள் ஆகும்.

 

சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே தனது சொந்த கட்சியான பாஜக தலைமையிலான அரசின் பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து முன்பு கருத்து தெரிவித்து இருந்த சுப்பிரமணியன் சுவாமி இது நல்ல ஐடியா ஆனால் அதற்கு முறையாகத் தயாராகாததால் தோல்வி அடைந்தது. ஜிஎஸ்டி முட்டாள்தனமானது என்றும், இந்தியா அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியினைப் பெறவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

 

நிதி அமைச்சர்

ஒரு முறை இந்தியாவின் நிதி அமைச்சராக நான் இல்லை என்பதால் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.