வரும் 13-ம் தேதி கருணாநிதிக்கு திரையுலகினர் நினைவேந்தல் நிகழ்வு

0
0

திமுக தலைவர் கருணாநிதிக்கு, ஆகஸ்ட் 13-ம் தேதி திரையுலகினர் நினைவேந்தல் நிகழ்வு நடத்த இருக்கின்றனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, ஆகஸ்ட் 13-ம் தேதி திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், கலை, இலக்கிய, திரைத்துறைப் பிதாமகனுமான கருணாநிதிக்குத் திரையுலகம் ஒன்று சேர்ந்து ஆகஸ்ட் 13-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணி முதல் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. சென்னை, அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கில் இந்த நினைவேந்தல் நடைபெறும்.

இந்த நினைவேந்தலில், திரைத்துறையைச் சார்ந்த அனைத்து நிர்வாகிகளும், அதன் உறுப்பினர்களும் பங்கேற்குமாறு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் கேட்டுக் கொண்டுள்ளன’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.