வருமான வரி வழக்கில் டி.கே.சிவகுமாருக்கு முன் ஜாமீன்: பொருளாதார நீதிமன்றம் உத்தரவு

0
0

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் மீதான வருமான வரி வழக்கில் அவருக்கு பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் நேற்று முன் ஜாமீன் வழங்கியது.

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த ஆண்டு வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத் தினர். இதில் கணக்கில் காட்டப் படாத ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துகள் சிக்கியது. இதே போல அவரது சகோதரரும் காங் கிரஸ் எம்பியுமான டி.கே.சுரேஷ் வீட்டிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் ரூ.3 கோடி மதிப் பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றினர்.

இதுதொடர்பாக டி.கே.சிவ குமார், டி.கே.சுரேஷ் ஆகியோர் மீது வருமான வரித் துறை 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் அமைச்சர் டி.கே.சிவகுமார், டி.கே.சுரேஷ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் டி.கே.சிவகுமார், டி.கே.சுரேஷ் ஆகிய இருவரும் முன் ஜாமீன் கேட்டு பெங்களூரு வில் உள்ள பொருளாதார குற்ற வியல் நீதிமன்றத்தில் மனு தாக் கல் செய்தனர். இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது மனு தாரர்கள் இருவரும் நீதிமன்றத் துக்கு வந்திருந்தனர். டி.கே.சிவ குமார் தரப்பின் கோரிக்கையை ஏற்று, நீதிமன்றம் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தர விட்டது.

முன்னதாக, இவ்வழக்கை விசா ரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை இடைக் கால தடை விதித்தது குறிப்பிடத் தக்கது. இந்த இரு நீதிமன்ற உத் தரவுகளும் டி.கே.சிவகுமாருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.