ரூ.15.64 கோடி லாபத்தில் மேட்ரிமோனி.காம் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..! | Matrimony.com clocks 5.1% rise in Q1 net profit at Rs 15.64 Crore

0
0

இந்தியாவின் திருமண மற்றும் வரன் தேடல் சேவைகளை வழங்கி வரும் முன்னணி நிறுவனமான மேட்ரிமோனி.காம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் லாப அளவுகளில் குறைவான வளர்ச்சியை அடைந்திருந்தாலும், இந்த 3 மாத காலத்திற்குச் சுமார் 15.64 கோடி ரூபாய் லாபத்தை அடைந்துள்ளது.


கடந்த நிதியாண்டின் மார்ச் காலாண்டில் 14.87 கோடி ரூபாயை லாபமாகப் பெற்ற மேட்ரிமோனி.காம், மார்ச் 31, 2018 உடன் முடிந்த வருடத்தில் சுமார் 73.86 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 5.1 சதவீதம் உயர்ந்து 15.64 கோடி ரூபாயை லாபமாகப் பெற்றுள்ளது மேட்ரிமோனி.காம்.

ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 89.56 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டு முழுவதும் இந்நிறுவனத்தின் வருவாய் 335.53 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் தலைவர் முருகவேல் ஜானகிராமன் கூறுகையில், மேற்கு, வட இந்திய மாநிலங்களில் கடுமையான போட்டி நிலவும் காரணத்தால் இப்பகுதிகளில் இருந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முடியவில்லை. இதனால் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி அளவுகளில் பெரிய மாற்றும் ஏதுவும் காணப்படவில்லை.

செய்திகளை உடனுக்குடன் படிக்க