ரூல்ஸ் மீறினா பாசக் கயிறு வீச விரட்டும் எமன், ரோட்டில் அலறவிட்ட ட்ராபிக் போலீஸ்! | Viral News in India: Do Not Break Traffic Rules, Yamaraj Warns You!

0
0

சிவப்பு நிற ஸ்நீக்கர் ஷூ, கையில் கதாயுதம், முறுக்கு மீசை, பெரிய கிரீடம், ஜிகுஜிகு டிராமா காஸ்டியூம். சாலையில் ஹெல்மட் போடாமல், அதிகவேகமாக செல்வோர், சிக்னலை மதிக்காமல் செல்வோர் போன்றவர்களை விரட்டி, விரட்டி பாசக் கயிர் வீசினார் ஒரு ஃபேண்டசி எமதர்ம ராஜா.

பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் சமீபத்தில் நடந்திருக்கிறது இந்த விசித்திர கூத்து. ஹலசூர் கேட் ட்ராபிக் போலீஸ், எமதர்ம ராஜாவை தங்கள் பிராண்ட் அம்பாசிடராக ஆக்கியுள்ளனர்.

ஹெல்மட் அணியாமல், வேகமாக வாகனத்தில் செல்வோர், மற்றும் இதர சாலை விதிகளை மீறியவர்களை விரட்டிப் பிடித்து மிரட்டினார் எமதர்ம ராஜா. மேலும், இனிமேல் சாலை விதிகளை மீறக் கூடாது என்று அவர்களுக்கு நல்ல மெசேஜ் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

ஜூலை!

ஜூலை மாதத்தை ரோட் சேப்டி (சாலை பாதுகாப்பு) மாதமாக கடைப்பிடிக்கிறார்களாம் பெங்களூரு ட்ராபிக் போலீசார். இதனால், இந்த மாதத்தில் நிறைய நிகழ்சிகள் நடத்தி மக்களுக்கு சாலை விதிகளை பற்றியும், சாலை விதி மீறல்களால் நடக்கும் துயரங்கள் பற்றியும் பாடமும் எடுக்கிறார்கள். பள்ளி, கல்லூரி மாணர்கள் மத்தியில், தெரு கூத்து போட்டும் கூட இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கிறது என்று ட்ராபிக் கமிஷ்னர் அனுபம் அகர்வால் கூறியிருக்கிறார்.

எமன்!

ஜூலை மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கொண்டாப்பட்டு வருவதையோட்டி, எமனை வைத்து ஒரு நிகழ்ச்சி செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள், பெங்களூரு ட்ராபிக் போலீஸார். எனவே, ஆங்காங்கே, சாலை விதிகளை மீறுபவர்களை எமன் மூலம் அறிவுரை கூறி பத்திரமாக அனுப்ப வைத்துள்ளனர்.

கருத்து!

கருத்து!

சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை நிறுத்தி எமன் வேடத்தில் இருக்கும் நபர், ஏன் சாலை விதிகளை மதிக்க வேண்டும், சாலை விதிகளை மீறுவதால் நடக்கும் விபரீதங்கள் என்னென்ன என்று கூறி உள்ளனர். இந்த நாடகத்தில் எமன் வேடத்தில் நடித்தவர் தியேட்டர் ஆர்டிஸ்ட் வீரேஷ் என்று அறியப்படுகிறது. இவர் இந்து புராண நாடகங்களில் நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஈர்ப்பு!

ஈர்ப்பு!

சாலையில் சென்ற பலர் எமனை கண்டு வியந்தனர். மேலும், சாலை விதிகளை மீறும் நபர்களை விரட்டி பிடித்து, அவர்களுக்கு எமன் கூறிய அறிவுரைகளும் வெகுவாக மக்களை சென்றடைந்தது. சாலை விதிகளை மீறி வேகமாக வாகனம் ஓட்டி வந்த சிலரை பிடித்தது மட்டுமில்லாமல், அவர்களுடன் சேர்ந்து பயணிக்கவும் செய்தார் எமன்.

முக்கியம்!

முக்கியம்!

சாலை விதிகளை முற்றிலும் அறிந்து அதன் படி நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் பெங்களூரு போன்ற பேரு நகரங்களில் வாகனங்கள் நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. லேசாக மழை பெய்தாலும் ட்ராபிக் ஸ்தம்பித்துவிடும் சூழலில் இருக்கிறது பெங்களூரு. இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் மட்டுமே 2,336 வழக்குகள் பெங்களூரு நகரில் பதிவாகி உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

குறைந்துள்ளது!

கடந்த ஆண்டு டிசம்பர் வரையில் எடுக்கப்பட்ட கணக்கில் 5,064 சாலை விபத்துக்களும், அதில் 609 பேர் மரணம் அடைந்திருந்தனர் என்றும் தகவல்கள் கிடைகப்பெற்றுள்ளது. மேலும், அதற்கு முந்தைய ஆண்டான 2016ல் 7,506 விபத்துகள் மற்றும் 754 உயிரழப்பு ஏற்பட்டிருந்தது என்ற தகவலும் கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு பெங்களூரில் சாலை விபத்துக்கள் குறைந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பெங்களூரு நகர டிராபிக் போலீஸார் எடுக்கும் இத்தகைய நல்ல முயற்சிகள் தான்.

இதே போல நாடெங்கிலும் அனைத்து பெருநகர டிராபிக் போலீசாரும் சீரிய நல்ல முயற்சிகள் எடுத்தால் நிச்சயம் சாலை விபத்துக்களை குறைக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்