ரிலீஸான மூன்றே நாட்களில் காலாவின் வசூல் எவ்வளவு தெரியுமா

0
3

காலா படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், சமுத்திரக்கனி, நானா படேகர், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டோர் நடித்த காலா படம் கடந்த 7ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸானது. விமர்சனம் நல்லபடியாக வந்தபோதிலும் முதல் நாள் வசூல் மந்தமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இந்நிலையில் படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

சென்னையில் மட்டும் 8, 9 ஆகிய தேதிகளில் ரூ. 4.9 கோடி வசூலித்துள்ளது. அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ரூ. 6.83 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் காலா வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரூ. 140 கோடியில் எடுக்கப்பட்ட காலா படம் ரிலீஸாகும் முன்பே சாட்டிலைட் மற்றும் இசை உரிமங்கள் மூலம் ரூ. 230 கோடி வசூலித்துவிட்டது. காலா படம் வசூலில் கல்லா கட்டுவது படக்குழுவினருக்கும், தயாரிப்பாளரான தனுஷுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.