ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனுக்கு பிறகு அகில உலக சூப்பர் ஸ்டார் தான் | It is Shiva after Rajini, Kamal, Ajith, Vijay, Siva

0
0

சென்னை: ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனுக்கு பிறகு அகில உலக சூப்பர் ஸ்டார் தான் என்ற நிலையாகியுள்ளது.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை ட்விட்டரிலேயே அமோகமாக விளம்பரம் செய்தார்கள்.

பலரையும் கலாய்த்து போஸ்டர்கள் வெளியிட்டே விளம்பரம் தேடினார்கள்.

5 மணி காட்சி

சிவா படத்திற்கு காலை 5 மணி காட்சி வைத்தனர். இவர் படத்திற்கெல்லாம் 5 மணி காட்சிக்கு யார் வருவார்கள் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. காரணம் அதிகாலை காட்சியை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது தான்.

கமல்

கமல்

ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய் ஆகியோரின் படங்களுக்கு தான் காலை 5 மணி காட்சி வைப்பார்கள். சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்கு 5 மணி காட்சி வைக்கப்பட்டது.

தமிழ் படம் 2

தமிழ் படம் 2

ரஜினி, கமல், அஜித், விஜய், சிவகார்த்திகேயனை அடுத்து சிவாவின் படத்திற்கு காலை 5 மணி காட்சி வைக்கப்பட்டுள்ளது. தனுஷின் விஐபி2 படத்திற்கும் காலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை

நம்பிக்கை

தங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து துணிந்து ரிஸ்க் எடுத்து 5 மணி காட்சி வைத்த தமிழ் படம் 2 குழுவுக்கு கைமேல் பலன் கிடைத்துவிட்டது. படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.