ரசிகரை நடிகராக்கி அழகு பார்க்கும் விஜய் சேதுபதி! | Vijay Sethupathy’s fan acting in Junga

0
10

சென்னை: தனது ரசிகர் ஒருவருக்கு ஜுங்கா படத்தில் நடிக்க வாய்ப்பளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் விஜய் சேதுபதி – இயக்குனர் கோகுல் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் ஜுங்கா. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்துள்ளனர். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஜுங்கா திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது. இதனை அறிவிப்பதற்காக படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி, இப்படத்தில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள பாலாவை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறினார். பின்னர் அவரை மேடைக்கு அழைக்கு பேசுமாறு பணித்தார் விஜய் சேதுபதி.

நிகழ்ச்சியில் கலக்கப் போவது யாரு பாலா பேசியதாவது, “அடிப்படையில் நான் விஜய் சேதுபதியின் ரசிகன். இரண்டு வருடங்களுக்கு முன்பே எனது சொந்த ஊரான காரைக்காலில் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இணைந்துவிட்டேன்.

ஜுங்கா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். என் முதல் படமே என் தலைவன் படம் என்பது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. விஜய் சேதுபதி மிகவும் எளிமையானவர். படப்பிடிப்பின் போது காபி குடித்துக்கொண்டிருந்தால் கூட, நீயும் குடிக்கிராயா எனக் கேட்டு உபசரிப்பார். இந்த வாய்ப்பை தந்த இயக்குனர் கோகுல் சாருக்கு நன்றி”, என அவர் கூறினார்.