யாருக்கெல்லாம் இந்த காய் பிடிக்காது?… அப்போ நீங்கதான் மொதல்ல இத படிக்கணும்… | Great Health Benefits Of Eggplant

0
0

வகைகள்

Image Courtesy

இது பல்வேறு அளவுகளில் வெவ்வேறு நிறத்திலும் காணப்படும். இதன் நிறத்திற்கேற்ப சுவையும் மாறுபடும். முட்டை வடிவத்தில் ஊதா நிறத்தில் இருக்கும் கத்திரிக்காய் பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஒன்று. இந்த நிறத்தைத் தவிர, கரும் ஊதா, வெள்ளை, சிவப்பும் ஊதாவும் கலந்த நிறம், வெள்ளையும் ஊதாவும் கலந்த நிறம், மஞ்சள் என்று பல நிறங்களில் கத்திரிக்காய் கிடைக்கிறது. தக்காளி, உருளைக்கிழங்கு, குடை மிளகாய் போன்ற தாவர இனத்தைச் சேர்ந்தது கத்திரிக்காய். வெவ்வேறு கத்திரிக்காயின் சுவையில் மாறுபாடு இருந்தாலும், பொதுவாக சிறு கசப்பு தன்மையும், மிருதுவான தன்மையும் கொண்டவையாக அனைத்து வகையும் உள்ளது.

விதைகள்

விதைகள்

Image Courtesy

இதன் விதைகள் வட்ட வடிவத்தில் உட்கொள்ளும் தன்மை கொண்டவையாக உள்ளன. இதன் விதைகள் வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் தாவர பெயர் பெர்ரி. கத்திரிக்காய் பல்வேறு பெயர்களைக் கொண்டது. ப்ரிஞ்சால், கார்டன் எக், குனியா ஸ்க்வாஷ், ஒபெர்ஜின் போன்றவை இதன் வேறு பெயர்கள் ஆகும்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

கத்திரிகாயை சுவையாக செய்து தரும் தாய்மார்கள் இருக்கும் வரையில் குழந்தைகளுக்கு அதன் முழு ஊட்டச்சத்தும் ஆற்றலும் நிச்சயம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கத்திரிக்காயில் கொழுப்பு மிகவும் குறைவு. புரதம், உணவு நார்ச்சத்து மற்றும் கார்போ சத்து மிகவும் அதிகம். கத்திரிக்காயில் குறிப்பிட்ட அளவு கனிமங்களும் உள்ளன. சிலருக்கு கத்திரிக்காய் உட்கொள்வதால் சருமம், வாய், போன்ற இடங்களில் ஒவ்வாமை ஏற்படலாம். தலைவலி, வயிற்றுபோக்கு போன்ற பாதிப்புகளும் சிலருக்கு உண்டாகலாம். இப்போது கத்திரிக்காயை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் பார்க்கலாம்.

கத்திரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள்

கத்திரிக்காயின் ஆரோக்கிய நன்மைகள்

கத்திரிக்காயை பலவிதங்களில் சமைத்து அதன் ஊட்டச்சத்துகளை நாம் பெற்றுக் கொள்ள முடியும். கத்திரிக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலுக்கு மிகவும் முக்கிய வினை புரிகிறது. உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இது மிகவும் அவசியமாகிறது.

1. நார்ச்சத்து

2. உடல் எடை கட்டுப்படுகிறது

3. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

4. இதய ஆரோக்கியம்

5. இரத்தத்திற்கு நன்மை தருகிறது

6. கனிம அளவு அதிகம்

7. புற்று நோய்

8. அறிவாற்றல்

9. வலிமையான எலும்புகள்

உணவு நார்ச்சத்து

உணவு நார்ச்சத்து

குடல் இயக்கங்கள் சிறப்பாக செயலாற்ற நார்ச்சத்து மிகவும் அவசியம். கத்திரிக்காய், செரிமான பாதையை பாதுகாத்து அதன் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. தொடர்ந்து உணவு நார்ச்சத்து கொண்ட கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் குடல் புற்று நோய் அபாயம் தவிர்க்கப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

உடல் எடை கட்டுப்படுகிறது

உடல் எடை கட்டுப்படுகிறது

சில வகை உணவுகளில் ஊட்டச்சத்துகள் பெருமளவில் இருந்தாலும், அதிக அளவு கலோரிகளைக் கொண்டிருக்கும். ஆனால் கத்திரிக்காய், குறைந்த அளவு கலோரிகள் கொண்ட அதிக ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருளாகும். ஒரு கப் கத்திரிக்காய் வேறு 35 கலோரிகள் மட்டுமே கொண்டது. தங்கள் அதிக எடையைக் குறைக்க விரும்பும் இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் இதனை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். உடல் பருமனை எதிர்த்து போராடும் அனைவரும் தொடர்ந்து கத்திரிக்காயை தங்கள் உணவில் இணைத்துக் கொள்ளலாம்.

கத்திரிக்காயில் உள்ள நார்ச்சத்து ஒரு தனித்தன்மை வாய்ந்தது. க்ஹ்ரேலின் என்னும் ஒரு ஹார்மோன் சுரப்பை இது நிறுத்துகிறது. உங்கள் வயிற்றுக்கு உணவு தேவை என்பதை மூளைக்கு உணர்த்தும் ஹார்மோன் இது. ஆகவே கத்திரிக்காய் இரண்டு வழிகளில் உங்களுக்கு நன்மை புரிகிறது. ஒன்று உங்கள் வயிற்றை நிரப்புகிறது. மற்றொன்று, உங்கள் பசிக்கும் உணர்வைக் குறைக்கிறது. இதன்மூலம், கடின உடற்பயிற்சிகள் எதுவும் செய்யாமலே குறிப்பிட்ட அளவு எடையை உங்களால் குறைக்க முடியும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

கத்திரிக்காயில் இருக்கும் தாவர ஊட்டச்சத்துகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த மிகவும் அவசியம். இரத்த ஓட்டம் மேம்படுவதால், மூளை சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. இதனால் ஒட்டு மொத்த உடலும் சீராக செயல்பட முடிகிறது. இவை அனைத்தும் சீராக நடைபெற, கத்திரிக்காயை நன்றாக வேக வைத்து உட்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்த தாவர ஊட்டச்சத்துகள் கத்திரிக்காயின் தோல் பகுதியில் தான் உள்ளன. ஆகவே அதனை உரித்து வீசி எரியாமல் முழுவதுமாக உட்கொள்ளப் பழக வேண்டும்.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

பொரித்த உணவுகள் தான் நாவிற்கு அதிக சுவையைத் தரும் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் சரியான மசாலாக் கலவையுடன் வேக வைத்த கத்திரிக்காய் கூட, ஒரு சுவையான உணவாக மாற முடியும். வேக வைத்த கத்திரிக்காய் அதிக சுவையுடன், எல்லா ஊட்டச்சத்துகளும் இழக்கப்படாமல் இருக்கும் உணவாக அமைகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க கத்திரிக்காய் உதவுகிறது. மேலும் பயோ ப்லவனைடுகளின் ஆதாரமாக இவை விளங்குகின்றன. இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் நிச்சயம் கத்திரிக்காயை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மன அழுத்தத்தைப் போக்கி, உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட உணவுப் பொருள் எப்போதும் இதயத்திற்கு நன்மையைச் செய்யும். அந்த வகையில் கத்திரிக்காய் இதயத்திற்கு நன்மை தரும் ஒரு உணவாகும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் இது உதவுகிறது. கத்திரிக்காயில் உள்ள பயோ ப்லவனைடுகள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன. இதயத்தில் உள்ள அழுத்தம் மற்றும் வலியைக் குறைக்க உதவுவதால் , இதய நலன் வெகுவாக பராமரிக்கப்படுகிறது.

இரத்தத்திற்கு நன்மை தருகிறது

இரத்தத்திற்கு நன்மை தருகிறது

இதயத்திற்கு நன்மை தரும் ஒரு உணவு, இரத்தத்திற்கும் நன்மையைத் தரும். போதுமான அளவு இரும்பு சத்து, பயோ ப்லவனைடு, மற்றும் வைட்டமின் கே சத்து போன்றவை, இரத்த நாளங்களை வலிமை அடையச் செய்து ஹீமோக்ளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. தொடர்ந்து கத்திரிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால், இரத்தம் உறைவது தடுக்கப்படுகிறது. இரத்தத்தில் இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவதால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிப்படைகிறது. இதனால் உடல் வலிமை இழந்து இரத்த சோகை உண்டாகிறது. இரத்த சோகை என்ற நிலை, உடலின் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை போதுமான அளவை விட குறைவாக இருப்பதால் உண்டாகிறது, இரத்த சோகையின் ஆரம்ப அறிகுறிகள், சோர்வு, தலைவலி, ஒற்றைத் தலைவலி, மனஅழுத்தம் மற்றும் மூளை செயல்பாட்டில் கோளாறு போன்றவை ஆகும். இரத்த சோகை உண்டாவதால் உங்கள் தினசரி வெளிகளில் கவனம் செலுத்த முடியாது. இதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில்முறைகள் பாதிக்கப்படலாம்.

ஆகவே ஒரு குறிப்பிட்ட அளவு இரும்பு சத்து உடலுக்கு மிகவும் அவசியம். இந்த அளவு கத்திரிக்காயில் உள்ளதால் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம். கத்திரிக்காயில் தாமிரம் அதிகம் இருப்பதால், இது இரும்பு சத்தோடு இணைந்து உடல் செயல்பாடுகளுக்கு தேவையான சிவப்பு இரத்த அணுக்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது. இவை இல்லை என்றால் உங்கள் இரத்தத்தில் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை திடீரென்று குறைத்து விடக்கூடும். சிவப்பு இரத்த அணுக்களின் மூலம் உங்கள் உடலில் ஆற்றலை அதிகரிக்க முடியும். இதனால் சோர்வு, அழுத்தம் போன்ற உடல் பாதிப்புகளைப் போக்க முடியும்.

கனிம அளவு அதிகம்

கனிம அளவு அதிகம்

கத்திரிக்காயில் கால்சியம், மற்றும் தாமிரம், மெக்னீசியம், மங்கனீஸ், போலேட், பொட்டாசியம், பாச்போராஸ், தைமின், நியாசின் போன்ற கனிமங்கள் மற்றும் இதர கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலுக்கு மிகக் குறைந்த அளவு தேவைப்பட்டாலும், உடல் உறுப்புகளின் சீரான செயல்பாடுகளுக்கு இவை அவசியம் தேவைப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது :

நீரிழிவை கட்டுப்படுத்தவும், நிர்வகிக்கவும் கத்திரிக்காய் பல காலங்களாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரையால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்ற விதத்தில், அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கார்போ சத்து கொண்டுள்ள ஒரு காய் கத்திரிக்காய். இது உடலில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது. உடலில் உள்ள இன்சுலின் அளவு நிர்வகிக்கப்பட்டவுடன், உடல் இயல்பாக சர்க்கரை அளவை இரத்தத்தில் கட்டுப்படுத்தலாம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் அதிகரிப்பை நிறுத்தலாம். சர்க்கரை அளவு அதிகரிப்பை நிறுத்துவதால், நீரிழிவால் உண்டாகும் அபாயங்களை எளிதாகக் குறைக்கலாம் அல்லது தடுக்கலாம்.

புற்று நோய்

புற்று நோய்

கத்திரிக்காயில் அதிக அளவு அன்டி ஆக்சிடென்ட் இருப்பதால், இவை பல்வேறு நோய்களுக்கு , உடலின் மோசமான நிலைகளுக்கு ஒரு தடுப்பு சுவர் போல் செயல்படுகின்றன. உடலின் சிறந்த நோயெதிர்ப்பு தன்மைக்கு வெள்ளை இரத்த அணுக்கள் காரணமாக இருக்கின்றன. போதுமான அளவு வெள்ளை இரத்த அணுக்கள் உடலில் இருப்பதால் பல்வேறு கிருமிகள் மற்றும் பக்டீரியாக்களை எதிர்த்து அவை போராடுகின்றன. கத்திரிக்காயில் வைடமின் சி அதிகமாக உள்ளன. இந்த வைடமின் , வெள்ளை இரத்த அணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகின்றன. கத்திரிக்காயில் இருக்கும் மங்கனீஸ் ஒரு இயற்கை அன்டி ஆக்சிடென்ட் ஆகும். மற்றும் இது ஒரு அத்தியாவசிய கனிமம் ஆகும்.

உடலில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் கூறுகளை திறமையுடன் அழிக்க வேண்டும், அதனால் அவை உங்கள் தோல் அல்லது உள் உறுப்புகளுக்கு மேலும் சேதம் ஏற்படுத்தாது . கத்திரிக்காயில் இரண்டு இயற்கை அன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. அவை நசுனின் மற்றும் க்லோரோஜெனிக் ஆகியவை. இவை இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகளை எதிர்த்து சிறந்த முறையில் போராடுகின்றன. இவற்றிற்கும் கிருமி நாசினி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகளும் உண்டு. அணுக்களின் வளர்சிதை மற்றதின் காரணமாக இந்த தீங்கு விளைவிக்கும் கூறுகள் உற்பத்தியாகின்றன. இவை ஆரோக்கியமான அணுக்களைத் தாக்குகின்றன. மற்றும் டிஎன்ஏவை தகர்த்து புற்று நோய் உண்டாக்கக் கூடிய அணுக்களை உற்பத்தி செய்கின்றன. இந்த அணுக்கள் உடலில் புற்று நோய் உண்டாகக் காரணமாகின்றன. இத்தகைய தீங்கு விளவிக்கும் கூறுகளை அழிப்பதால் கத்திரிக்காய் , புற்று நோய் வராமல் தடுக்க உதவுகிறது, கத்திரிக்காயில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் , உடலின் உறுப்புகள் சீராக செயல்படுவதை உறுதி செய்கின்றன. மேலும் தீங்கு உண்டாக்கும் தொற்றிலிருந்து உடலை பாதுக்காக்கின்றன. மேலும் இதய நோய் மற்றும் புற்று நோய் போன்ற அபாயகரமான நோயிலிருந்து உடலைக் காக்கின்றன.

அறிவாற்றல்

அறிவாற்றல்

உடல் பகுதிகளில் மூளை அதி முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் தான் கனமான ஓட்டிற்குள் இது பாதுகாக்கப்படுகிறது. ஆனால் உடலின் உள்ளுக்குள் நடக்கும் சில செயல்பாடுகள் காரணமாக மூளை செயல்பாடுகளில் பாதிப்பு உண்டாகலாம். உடலின் உள்ளுக்குள் இருக்கும் பல எதிர்மறைக் கூறுகள் மூளையைத் தாக்கலாம். ஆனால் அத்தகைய கூறுகளைத் தாக்கும் வல்லமை கத்திரிக்காய்க்கு உண்டு. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், கத்திரிக்காயில் இருக்கும் நசுனின் என்பது ஒரு நிறமி ஆகும். இந்த நிறமி, மூளையின் தீய நடத்தைகளைத் தவிர்ப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது மூளையில் ஏற்படும் எதிர்மறை நடத்தைகளை நிறுத்துவதாக அறியப்படுகிறது. தீங்கு விளைவிக்கும் கூறுகள் நரம்பு சீர்குலைவிற்கும் காரணமாக இருக்கின்றன. இதனால் வயது முதிர்ந்தவர்கள், அல்சைமர் நோய் பாதிப்பு கொண்டவர்கள்

டிமென்ஷியா போன்ற கோளாறுகள் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு பொதுவாக காணப்படும். இவை நரம்பு அணுக்கள் மற்றும் மூளையுடன் தொடர்பு கொண்டவையாகும். கத்திரிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் உடனடி பலன் கிடைக்கவில்லை என்றாலும், இத்தகைய நரம்பு சீர்குலைவை உண்டாக்கும் கூறுகளை சமாளிக்கும் திறன் அவற்றில் உள்ளதால், வயது அதிகரிக்கும் போது சிறந்த நிவாரணத்தை வழங்க முடியும். நசுனின் பயன்பாட்டால் மூளையில் ஏற்படும் விளைவுகளை தற்போது வரை விலங்குகளில் மட்டுமே பரிசோதனை செய்து வந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அதன் முடிவுகள் நேர்மறை பலன்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக அறிவாற்றல் கோளாறுகள் கொண்டவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

தாவர ஊட்டச்சத்துகள் மூளை செயலாற்றலை அதிகரித்து மன நலனை மேம்படுத்த உதவுகிறது. மூளை கோளாறுகள் பற்றி விவாதிக்கும்போது அதற்கான அடிப்படைக் காரணமான தீங்கு விளைவிக்கும் கூறுகளை மட்டும் இவை அழிப்பதில்லை, மாறாக, உடல் மற்றும் மூளையில் உள்ள நச்சுகளைப் போக்கி, மற்ற நோய்களும் வராமல் தடுக்க உதவுகின்றன. இவை, மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றன. இதனால் மூளை சுறுசுறுப்புடன் செயலாற்ற முடிகிறது. இதனால் உங்கள் ஞாபக சக்தி மற்றும் பகுப்பாய்வு சிந்தனை அதிகரிக்கிறது. கத்திரிக்காயில் இருக்கும் பொட்டாசியம் , ஒரு சிறந்த குழல் விரிப்பியாக செயல்படுகிறது. அதாவது, தமனிகளையும் , இரத்த நாளங்களையும் விரிவு படுத்தி, இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் தான் மூளையின் சூப்பர் உணவாக கத்திரிக்காய் அழைக்கப்படுகிறது.

வலிமையான எலும்புகள்

வலிமையான எலும்புகள்

நமது உடல் எலும்புகளால் உருவானது. எலும்புகள் வலிமையாக இருந்தால், வயது முதிர்விலும் ஆரோக்கியமாக இருக்க முடியும். உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைப்பதில் கத்திரிக்காய் முக்கிய இடம் பெறுகிறது. குறிப்பாக எலும்பு நொதித்தல் அல்லது எலும்புப்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை எடுத்துக் கொள்ளலாம். கத்திரிக்காய் மற்றும் இதர பழங்களில் உள்ள பீனோலிக் கூறுகள் ஒரு சிறந்த வேறுபாட்டை உணர்த்துகின்றன. எலும்புப் புரையின் அறிகுறிகளைக் குறைத்து வலிமையான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை உங்களுக்கு இந்த கூறுகள் வழங்குகின்றன. மேலும் உங்கள் எலும்புகளின் திடத்தையும் இவை அதிகரிக்கின்றன. கத்திரிக்காயில் அதிக அளவு இரும்பு சத்து மற்றும் கால்சியம் உள்ளது . இவை எலும்பு வலிமைக்கு பெரிதும் உதவுகின்றன. மேலும் கத்திரிக்காயில் உள்ள இரும்பு மற்றும் கால்சியம் எலும்புகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்க உதவுகின்றன. கால்சியம் சத்து அதிகமாக இருக்கும் மற்றொரு உணவு, பால். இப்படி எல்லா பொருட்களிலும் உள்ள கால்சியம் சத்தை உங்கள் உடல் உறிஞ்சிக் கொள்ளும். கத்திரிக்காயில் காணப்படும் பொட்டாசியம் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன.

தற்போது கத்திரிக்காயின் அனைத்து ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதனால் முடிந்த அளவிற்கு இதனை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக கத்திரிக்காயை உபயோகிக்கும்போது, பூச்சிகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து பின் பயன்படுத்தவும். கத்திரிக்காயின் வெளிப்புறத்தில் திட்டுகள் பெரிதாக காணப்பட்டால் அவற்றில் பூச்சிகள் இருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். ஆகவே கவனம் அவசியம்.