மோசமான படம் என்பதாலேயே என் மகனை நடிக்க வைத்தேன்: கடமான்பாறை பற்றி மன்சூர் அலிகான் | kadamanparai is a worst film, says Mansoor ali khan

0
0

சென்னை: தனது மகன் நடிப்பில், தான் இயக்கி இருக்கும் கடமான்பாறை திரைப்படம் ஒரு மோசமான படம் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘கடமான்பாறை’. அவரது மகன் அலிகான் துக்ளக் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனுராகவி, ஜெனி என படத்தில் அவருக்கு இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர்.

காதல் மற்றும் திரில்லர் கலந்து உருவாகியிருக்கம் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டரை சென்னையில் நேற்று நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், கடமான்பாறை ஒரு மோசமான படம் என்றார்.

என் மகன்:

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது, ” இது ஒரு மோசமான படம் என்று தான் நான் சொல்வேன். வேறு யாரையாவது நடிக்க வைப்பதற்கு பதிலாக எனது மகன் அலிகான் துக்ளக்கை நடிக்க வைத்துள்ளேன்.

சூரப்பன்:

சூரப்பன்:

படத்தில் நான் ஆதிவாசியாக நடிக்கிறேன். ஒரு காட்டையே எனது காட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரப்பன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னை மீறி அந்த காட்டில் இருந்து யாராலும் எதுவும் செய்ய முடியாது. செம்மரக்கட்டை கடத்த முடியாது, கனிமவளங்களை திருட முடியாது.

திகிலூட்டும் காட்சிகள்:

திகிலூட்டும் காட்சிகள்:

காட்டிலிருந்து எந்த பொருளையும் கடத்த விடாமல் தடுக்கும் என்னிடம் ஒரு காதல் ஜோடி மாட்டிக்கொள்கிறது. அவர்கள் என்னிடம் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன், திகிலூட்டும் காட்சிகளை கொண்டு சொல்லியுள்ளோம்.

விரைவில் ரிலீஸ்:

விரைவில் ரிலீஸ்:

ஆந்திரா மாநிலத்தில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும், பாண்டிசேரி, சென்னை போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் இப்படம் திரைக்கு வரும்”, என அவர் கூறினார்.