மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு

0
0

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 14,334 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 32,284 கனஅடியாக அதிகரித்தது.

நேற்று முன்தினம் காலை 65.15 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 68.42 அடியானது. நீர் இருப்பு 31.36 டிஎம்சி-யானது.