மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் 2-வது நாளாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி

0
0

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த 7-ம் தேதி காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே கடந்த 8-ம் தேதி இரவு 7 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் இரவு பகல் பாராது ஆயிரக்கணக் கான திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அவருக்கு கண் ணீர் அஞ்சலி செலுத்தி வருகின் றனர். நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் கருணாநிதியின் மனைவி, மகன், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன் பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

2-வது நாளான நேற்று காலை முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர் களும், பொதுமக்களும் கருணாநிதி யின் உடல் அடக்கம் செய்யப் பட்ட இடத்தில் அஞ்சலி செலுத் தினர். கருணாநிதியின் உடல் அடக் கம் செய்யப்பட்ட மேடை கிரானைட் கற்கள், டைல்ஸ் கற்க ளால் அழகாக கட்டமைக்கப் பட்டுள்ளது. அடக்கம் செய்யப் பட்ட பகுதியில் ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளை, பப்பாளி, அன்னாசி மற்றும் பல்வேறு மலர்களைக் கொண்டு நேற்று உதயசூரியன் சின்னம் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மலர்வளையம், மலர் மாலை கள், பூக்கள், பழங்கள், தேங்காய், வாழைப் பழங்களை கொண்டு வரும் தொண்டர்கள் கோயில்களில் வழிபடுவதுபோல வழிபட்டு வருகின்றனர். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு, சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிர மணியன் ஆகியோர் நேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தொழிலதிபர் பழனி பெரியசாமி உள்ளிட்டோரும் நேற்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து மெரினா கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் கருணாநிதி நினை விடத்தை ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.