மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ, கால் டாக்ஸி சேவை இன்று தொடக்கம்: ரூ.10, 15 கட்டணத்தில் 3 கி.மீ. வரை செல்லலாம்

0
0

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில் 8 இடங் களில் இருந்து ஷேர் ஆட்டோ வசதியும், 5 இடங்களில் இருந்து கால்டாக்ஸி வசதியும் இன்று முதல் தொடங்கப்படுகிறது.

மெட்ரோ ரயில்களில் தினமும் பயணிப்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 55 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில் இன்று (11-ம் தேதி) முதல் ஷேர் ஆட்டோ, கால்டாக்ஸி வசதி தொடங்கப் படுகிறது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவ னம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு எளிதில் செல்ல வசதியாக கால்டாக்ஸி, ஷேர் ஆட்டோ வசதி 11-ம் தேதி (இன்று) முதல் 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, பரங் கிமலை, சின்னமலை அல்லது நந்தனம், திருமங்கலம் அல்லது அண்ணா நகர் டவர் ஆகிய 8 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 3.கி.மீ. தூரத்துக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும். ஒருவருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். இதேபோல கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணா நகர் கிழக்கு, டிஎம்எஸ், வடபழனி ஆகிய 5 இடங்களில் இருந்து 3 கி.மீ. தூரத்துக்கு கால்டாக்ஸி வசதியும் இன்று முதல் தொடங்கப் படுகிறது. ஒருவருக்கு ரூ.15 கட்ட ணம். இந்த சேவை காலை 6.30 மணி முதல் இரவு 9.30 வரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.