மெக்சிகோ பட்டாசு கிடங்கில் தீ விபத்து: 24 பேர் பலி

0
0

மெக்சிகோ பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தொடர் தீ விபத்தில் 24 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டடோர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “மெக்சிகோவின் துபெல்பிக் நகரில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தொடர் தீ விபத்தில்  24 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தீ விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது,  “நான் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது. பயங்கரமான சத்தம் கேட்டது. நாங்கள் எங்களது வீட்டைவிட்டு வெளியே வந்து பார்க்கும்போது அந்த பட்டாசு கிடங்கிலிருந்து தீ பிழம்புகள் வெளியேறின” என்றார்.

இதற்கு முன்னரும் இதே பட்டாசு கிடங்கில் இரண்டு முறை  தீ விபத்துகள் ஏற்பட்டன. 2016 ஆம் ஆண்டு இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 40 பேர் பலியாகினர்.