மூடர்கூடம் இயக்குனரின் அடுத்த படம்: சென்றாயன் இல்லையா? | Moodarkoodam director’s next movie announced!

0
0

சென்னை: மூடர் கூடம் திரைப்பட இயக்குனர் நவீனின் அடுத்தபடமான அலாவுதீனின் அற்புத கேமரா அறிவிப்பை இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

2013ம் ஆண்டு வெளியான மூடர்கூடம் திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் நவீன். படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஒரு வீட்டிற்குள்ளேயே சுவாரஸ்யமாக அமைத்து புதிய அத்தியாயத்தை உருவாக்கினார். இன்று பிக் பாஸில் கலக்கும் செண்ட்ராயனை அறிமுகப்படுத்தியவர் நவீன்.

நான்கு வருடங்களுக்கு பிறகு, தன்னுடைய அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அலாவுதீனின் அற்புத கேமரா என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் தொடர்பான அறிவிப்பை காலா இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நவீன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். ஒயிட் ஷேடோஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. கே.ஏ.பட்சா ஒளிப்பதிவு செய்கிறார், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பு செய்கிறார். மூடர்கூடம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுதுகிறார்.

விஜய் ஆண்டனியை வைத்து படம் இயக்குவதாக இருந்த நிலையில், அலாவுதீனின் அற்புத கேமரா பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தபடத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி பட வேலைகள் ஆரம்பாகும். எப்போது உங்கள் அடுத்த படம் என்ற கேள்வியை நீண்ட நாட்களாக எதிர்கொண்டேன், அதற்கான பதிலை தோழர் ரஞ்சித் அறிவித்துவிட்டார் என நவீன் ட்வீட் செய்துள்ளார். சென்றாயன் படத்தில் இருக்கிறாரா என்று ரசிகர்கள் கேட்கின்றனர்.