மும்தாஜை அடுத்து அன்டர்கவர் ஆபரேஷனில் இருக்கிறாரா டேனி? | Is Daniel an undercover agent of Bigg Boss 2?

0
0

சென்னை: மும்தாஜை அடுத்து டேனி ஏதாவது அன்டர்கவர் ஆபரேஷனில் இருக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் நடந்த போலீஸ், திருடன் டாஸ்க்கை பார்த்தால் கடுப்பாக உள்ளது. மொக்கை போலீஸ், மொக்கை திருடன்கள். போலீசும், திருடன்களும் சேர்ந்து திருட திட்டமிடுகிறார்கள்.

திருடனை கையும், களவுமாக பிடிக்க வேண்டிய போலீசான மகத், சென்றாயன் ஆகியோர் கூட்டுக்களவாணிகளாக உள்ளனர்.

சோறு

பிக் பாஸ் வீட்டில் ஆம்லெட்டை திருட திருடர்கள் அணியில் உள்ள டேனி, யாஷிகா, ஐஸ்வர்யா, போலீஸ் அணியில் உள்ள டேனி, சென்றாயன், மும்தாஜ் ஆகியோர் திட்டமிடுகிறார்கள்.

போலீஸ்

போலீஸ்

திருடன்கள் வந்து சாப்பாடை திருடிச் சென்றபோது எதிரே வந்த பொன்னம்பலம் அதை தட்டிவிட்டார். திருடர்களை பிடிக்காத போலீஸ் பொன்னம்பலத்தை மட்டும் கேள்வி கேட்கிறது. போப்பா நீயும் உன் விசாரணையும், பில்ட்அப் மகத்.

கோபம்

கோபம்

போலீஸார் ஏன் உங்கள் வேலையை செய்யவில்லை என்று ஜனனி உள்ளிட்ட ஹவுஸ்மேட்ஸ் கோபப்பட்டு கேட்டது நியாயம் தான். ஆனால் போலீஸ் லாஜிக்கே இல்லாமல் செயல்படுகிறது.

டேனி

டேனி

இத்தனை நாட்களாக மகத் மட்டும் தான் பார்வையாளர்களை கடுப்பேற்றி வந்தார். தற்போது அவருக்கு போட்டியாக டேனியும் நம்மை கடுப்பேற்றுகிறார். ஏதாவது அன்டர்கவர் ஆபரேஷனா டேனி?

போலி

போலி

டேனி கேமராக்கள் முன்பு போலியாக நடிப்பதாக சக போட்டியாளர்களே தெரிவித்தனர். அப்படி என்றால் தற்போது தான் டேனியின் சுயரூபம் தெரிகிறதா? நீயங்கள் பேசுவதை கேட்டால் பார்வையாளர்களுக்கு பத்திக்கிட்டு வருகிறது டேனி.

பார்வையாளர்கள்

பார்வையாளர்கள்

சீரியல்களில் அடுத்தவர்கள் வீட்டு பிரச்சனைகளை பார்த்து பாவப்படும் பார்வையாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் அப்படியே செய்வார்கள் என்று நினைத்தது தவறு. அடுத்தவர்கள் வீட்டு பிரச்சனையில் அக்கறை காட்டினாலும் உங்கள் பிக் பாஸ் வீட்டு ரோதனையில் ஈடுபாடே இல்லை. மாத்தி யோசிங்க பாஸு.