மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா | Sivakarthiyen acts in Rajesh direction!

0
0

சென்னை: சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இரண்டாவது முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சீம ராஜா திரைப்பட வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். ரவிக்குமார் இயக்கும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

நயன்தாராவிற்கு கோலமாவு கோகிலா ரிலீசுக்கு தயாராக உள்ளது. கொலையுதிர்க்காலம், இமைக்கா நொடிகள், விஸ்வாசம் மற்றும் தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி என்று பிசியாக இருக்கிறார்.

இந்த நிலையில் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில் சிவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ட்விட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.

சிவா, ராஜேஷ், நயன்தாரா மற்றும் சதிஷுக்கு வாழ்த்து தெரிவித்து ஆர்.டி.ராஜா ட்வீட் செய்துள்ளார். இத்திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது

சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் வேலைக்கரன் படத்திற்கு பிறகு மீண்டும் இணைகின்றனர். ராஜேஷ் படம் என்றாலே சந்தானம், சரக்கு என்பது எழுதப்படாத விதி. சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார். சரக்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளனவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.