மிஷ்கின்-உதயநிதி கூட்டணியில் இசையமைக்கும் இளையராஜா | News7 Paper

0
0

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரியதர்‌ஷன், சீனு ராமசாமியை தொடர்ந்து தற்போது மிஷ்கினுடன் இந்த படத்தில் இணைந்துள்ளார் உதயநிதி.

மிஷ்கின் சாந்தணுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்த நிலையில், படத்தை தயாரிக்கவிருந்த லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் அந்தப் படம் கைவிடப்பட்டு, அதே கதையில் உதயநிதி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த  படத்தை உதயநிதியே தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு அரும் ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் தொடங்க  உள்ளதாகவும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.