மாமாவைத் தயாரித்த படம் நஷ்டம்.. மாப்பிள்ளையின் புதிய திட்டம் | Gossip on Mappilai actor

0
0

சென்னை: மாமனாரை வைத்து தயாரித்த கருப்பு படம் தோல்வியடைந்ததால், மற்றொரு தயாரிப்பாளரிடம் புதிய டீல் பேசியுள்ளாராம் அப்படத்தின் தயாரிப்பாளரான மாப்பிள்ளை நடிகர்.

மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகி, நல்ல விமர்சனம் கிடைத்த போதும், எதிர்பார்த்த வசூலைத் தராத படம் கருப்பு. இதனால் இப்படத்தைத் தயாரித்த மாப்பிள்ளை நடிகருக்கு நஷ்டம்.

இதனால் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு சுமார் ரூ. 40 கோடி வரை நஷ்ட ஈடாக பணம் தர சம்மதித்துள்ளாராம் மாப்பிள்ளை. அதோடு தனது நார்த் படத்தையும் அவர்களுக்கே தருவதாக வாக்கு தந்துள்ளாராம்.

இந்தப் பிரச்சினைக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தான் தீர்வு சொல்லியுள்ளார். எனவே, அதற்கு பதில் உபகாரமாக அவரது தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம் மாப்பிள்ளை.

எல்லா வீட்டிலும் மாப்பிள்ளைகளால் மாமனார் டென்சன் ஆவார்கள். ஆனால், அதற்கு தலைகீழாக இந்த சூப்பர் குடும்பத்தில் மாமனாரால், பிரச்சினையில் சிக்கியுள்ளார் மாப்பிள்ளை.

இது ஒருபுறம் இருக்க, இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தனது அடுத்தப்பட வேலைகளில் பிசியாகி விட்டார் மாமா.