‘மாநாடு’: வெங்கட் பிரபுவுடன் சேர்ந்து அரசியல் பேசப் போகும் சிம்பு | Simbu, Venkat Prabhu movie is titled Maanadu

0
0

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்திற்கு மாநாடு என்று தலைப்பு வைத்துள்ளனர்.

வெங்கட் பிரபு, சிம்பு கைகோர்த்துள்ள படத்தின் தலைப்பு இன்று வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர்.

படத்திற்கு மாநாடு என்று பெயர் வைத்துள்ளனர்.

போஸ்டர்

சும்மா தலைப்பை அறிவிக்கவில்லை. அதற்காக ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். போஸ்டரை பார்த்தாலே வெங்கட் பிரபுவும், சிம்புவும் அரசியல் பேசப் போகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

சசிகாந்த்

படத்தலைப்பை வெளியிட்டு வெங்கட் பிரபு ட்வீட்டியதும் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்தவர் தமிழ் படம் 2 தயாரிப்பாளர் சசிகாந்த். இந்நேரம் அந்த போஸ்டரை கலாய்த்து சசி ஒரு போஸ்டர் தயார் செய்திருப்பார்.

அமுதன்

படத்தின் போஸ்டரை வெளியிட்டால் வசதியாக இருக்கும் என்று தமிழ் படம் 2 இயக்குனர் சி.எஸ். அமுதன் ஏற்கனவே வெங்கட் பிரபுவிடம் தெரிவித்திருந்தார். அநேகமாக கலாய் போஸ்டரை அமுதன் இன்றே வெளியிடக்கூடும்.

எச்சரிக்கை

வெங்கட் பிரபுவின் அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் வாழ்த்தியதோடு எச்சரிக்கவும் செய்துள்ளனர்.

சிம்பு

சிம்பு

சிம்புவை அரசியலில் பெரிய ஆளாக்கிப் பார்க்க அவரது தந்தை ஆசைப்படுவதாக கிசுகிசுக்கப்படும் நேரத்தில் படத்திற்கு தலைப்பு மாநாடு என்று வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.