மாநகர போக்குவரத்து கழகத்தில் 345 புதிய பேருந்துகள் விரைவில் இணைக்கப்படும்

0
0

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 100 சிறிய பேருந்துகள் உட்பட மொத்தம் 345 புதிய பேருந்துகள் விரைவில் இணைக்கப்படும் என மாநகர போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பேருந்துகளை வாங்காததால், மொத்தமுள்ள பேருந்துகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவை காலாவதியாகியுள்ளன. பல்வேறு வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளின் இருக்கைகள், கண்ணாடிகள் உடைந்து காணப்படுகின்றன. இதேபோல் பல பேருந்துகளின் தானியங்கி கதவுகளும், மேற்கூரையும் சேதமடைந்த நிலையில் உள்ளன.

இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சமீபத்தில் 500 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டன. அதில், ஒரு பேருந்தைக்கூட சென்னை மாந கர போக்குவரத்துக் கழகத்துக்கு ஒதுக்காதது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அடுத்தடுத்து வரும் புதிய பேருந்துகளில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழக உயர் அதிகாரி கள் கூறும்போது, ‘‘அரசு போக்குவரத்துக் கழங்களில் புதிய பேருந்துகள் ஒதுக்கீட்டின்படி, மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 100 சிறிய பேருந்துகள் உட் பட மொத்தம் 345 புதிய பேருந்து கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாதத்தில் இந்த புதிய பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இணைக்கப்பட்டு, பயணிகளின் சேவைக்கு உட்படுத்தப்படும். இதற்கேற்ப, பழைய பேருந்து கள் நீக்கப்படும்’’ என்றனர்.