மாதுளை மார்பக புற்றுநோயிடமிருந்து உங்களை பாதுக்காக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? | Health benefits of Pomegranate

0
1

உடல் பருமனை குறைக்கும்

தினமும் 8 அவுன்ஸ் மாதுளை ஜூஸ் குடிப்பது உங்கள் உடல் எடை அதிகரிப்பதை குறைக்கும். சிலர் எடை அதிகமாவோ அல்லது பருமனாகவோ இருப்பார்கள் காரணம் அவர்கள் உடலின் தேவையை விட அவர்கள் அதிகம் உண்பதுதான். மாதுளை ஜூஸ் குடிப்பது வயிறு நிரம்பியது போன்ற ஒரு திருப்தியான உணர்வை தரும். எனவே உங்களுக்கு அடுத்தமுறை பசியெடுக்க நீண்ட நேரமாகும். சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன் மாதுளை ஜூஸ் குடித்தால் அது உங்களை அதிகம் சாப்பிடவிடாது. அதுமட்டுமின்றி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

மாதுளையின் மற்றொரு முக்கிய பயன் இதயத்தை பாதுகாப்பது. இது இதயம் மற்றும் தமனிகளை பாதுகாக்கிறது. ஆய்வுகளின் கூற்றுப்படி மாதுளை ஜூஸ் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் தமனிகளை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்புகளை கட்டுப்படுத்துகிறது.

மார்பக புற்றுநோயை தடுக்கும்

மார்பக புற்றுநோயை தடுக்கும்

மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல்ஸ் மார்பக புற்றுநோயை வராமல் தடுக்கவும் மேலும் மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள எலாஜிடேன்னிஸ் உடலுக்கு தேவையான ஈஸ்ட்ரோஜனை அதிகளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் மார்பக புற்றுநோய் செல்கள் அதிகரிப்பதையும் தடுக்கிறது. எலாஜிடேன்னிஸ்ஸிலிருந்து உருவாக்கப்படும் யூரோதிலின் -பி மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை குறைக்கிறது.

நினைவாற்றல்

நினைவாற்றல்

மாதுளையில் உள்ள பாலிபினால் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதன் மூலம் நினைவாற்றலை அதிகரிக்கிறது. வயதாகும்போது மூளையின் ஆற்றலும், வேகமும் குறைவது இயல்பானதுதான். எனினும், ஆரோக்கியமான உணவு முறை இதனை சரிசெய்யக் கூடும். 2016-ல் நடந்த ஆய்வொன்றில் 4 வாரம் தினமும் மாதுளை ஜூஸ் குடித்தவர்களின் நினைவாற்றல் மாதுளை ஜூஸ் குடிக்காதவர்களின் நினைவாற்றலை விட சிறப்பாக இருந்தது நிரூபிக்கப்பட்டது.

சர்க்கரை அளவை குறைத்தல்

சர்க்கரை அளவை குறைத்தல்

மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலும் பழங்காலம் முதலே மாதுளை நீரிழிவு சிகிச்சைக்காக பயன்படுத்தபட்டுவருகிறது. மாதுளையை பற்றி அறியாத நன்மைகள் இன்னும் பல உள்ளது. இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

பாலியல் செயல்திறன்

பாலியல் செயல்திறன்

மாதுளை சிறந்த ஆக்சிஜனேற்றியாக பயன்படுவதுடன் ஆக்சிடேடிவ் அழுத்தத்தையும் குறைக்கிறது. ஆக்சிடேடிவ் அழுத்தம் என்பது ஆண்களின் விரைப்புத் தன்மை பெண்கள் கருவுறுதல் வாய்ப்புகளை குறைக்க கூடியது. மேலும் இது ஆண்கள் மற்றும் பெண்களிடையே டெஸ்ட்ரோஜெனின் உற்பத்தி அளவை அதிகரிக்கிறது, இந்த ஹார்மோன்தான் பாலியல் உணர்வை அதிகளவில் தூண்டக்கூடியது.

செரிமானம்

செரிமானம்

மாதுளை குடல் நாளங்களில் உள்ள வீக்கத்தை குறைத்து செரிமானத்திறனை அதிகரிக்க கூடியது. குடல் புண் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இது சிறந்த தீர்வாக அமைகிறது.