`மாங்காடு சொக்கலிங்கம் தேவநேசன்’ `இசையமைப்பாளர் தேவா’ ஆனது இப்படித்தான்! #WhatSpiritualityMeansToMe

0
0

தேனிசைத் தென்றல் தேவா `மனசுக்கேத்த மகராசா39 தொடங்கி `அண்ணாமலை39 `பாட்ஷா39 எனப் பல படங்களில் ஜனரஞ்சகமான இசையை வழங்கிய இசையமைப்பாளர் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் பொறுப்பிலிருக்கிறார் இவரின் மகன் ஶ்ரீகாந்த் தேவாவும் ஓர் இசையமைப்பாளரே தேவாவை `எனது ஆன்மிகம்’ பகுதிக்காகச் சந்தித்தோம்நான் பொறந்து வளர்ந்தது எல்லாமே மயிலாப்பூர் விசாலாட்சித் தோட்டம் பக்கத்துல இருக்கிற குடிசைப் பகுதிதான் சின்ன வயசிலிருந்தே எனக்கு சாமி நம்பிக்கை உண்டு அதுக்குக் காரணம் என் அம்மா ஆனா அப்பாவுக்கு சாமி நம்பிக்கை கிடையாது அம்மா செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமைன்னா கோலவிழி அம்மன் முண்டகக் கண்ணியம்மன் கோயில்னு என்னைக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க அப்படிப் போக முடியலைனா அம்மா எப்பவும் கும்பிடுற வீட்டுக்குப் பக்கத்துலயே இருக்கிற துலுக்கானத்தம்மன் கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போவாங்க அந்த அம்மனை `கன்னியம்மன்39 `கன்னிமா39னுதான் சொல்லுவாங்க அம்மன்கிட்ட எங்க அம்மா பேசுற மாதிரியே வேண்டிப்பாங்க புள்ளைங்களுக்கு ஒரு கஷ்டம்னா அம்மன்கிட்டதான் சொல்லி அழுவாங்க விபூதி குங்குமம் வாங்கிக்கிட்டு வந்து பூசுவாங்க வறுமையில பணக் கஷ்டம் வந்துச்சுனா `எம்புள்ளைங்கல்லாம் இப்படிக் கஷ்டப்படுது என்னடி பாத்துக்கிட்டு இருக்கே என்னடி உன் மனசுல நெனைச்சுக்கிட்டு இருக்கே’னு `வாடி போடி’னு ஒருமையில உரிமையா திட்டுவாங்க அப்போ நான் ஓரளவு படிச்சிட்டு `டென் ஏ ஒன்39னா வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன் அப்பவே பாட்டு மியூசிக்ல எல்லாம் ஆர்வம் ஜாஸ்தி அப்படி இப்படி கஷ்டப்பட்டு தூர்தர்ஷன்ல ஃப்ளோர் மேனேஜர் வேலைக்குச் சேர்ந்துட்டேன் 450 ரூபாய் சம்பளம் ஆனா அதில்லாம கோயில் கச்சேரிகள் மூலமாகவும் ஓரளவுக்கு வருமானம் வந்துச்சு ஒரு நாள் தூர்தர்ஷன்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தப்போ சிவப்புச் சட்டை சிவப்பு வேஷ்டியில கனகபாவிஜயன்ங்கிறவர் வந்து பார்த்தார் அவர் மேல்மருவத்தூர் கோயில் வாசல்ல செருப்பெல்லாம் வாங்கிவெச்சிக்கிட்டு இருந்தவர் மேல்மருவத்தூர் அடிகளாரைப் பத்தி 10 பாடல்கள் எழுதி எடுத்துக்கிட்டு வந்திருந்தார் `இதை கேஸட்டா எனக்குப் பண்ணிக் கொடுங்க39னு கேட்டார் `எம்எஸ்விஸ்வநாதன் மாதிரி நம்ம பேரும் கேஸட்டுல வரட்டுமே’னு எனக்கும் ஓர் ஆசை அப்போ அவர்கிட்ட வெறும் 900 ரூபாய்தான் இருந்தது அதுல எப்படி 10 பாடல்களை ரிக்கார்டிங் பண்ண முடியும் நான் என் தம்பிங்க உதவியோட கச்சிதமான வாத்தியங்களைக்கொண்டு கோயில்ல பாடுறவங்களை வெச்சு ரிக்கார்டிங் பண்ணிட்டேன் அவருக்கு சந்தோஷம்னா சந்தோஷம் அப்படி ஒரு சந்தோஷம் `வெள்ளிக்கிழமை மேல்மருவத்தூர் வாங்க அம்மனை தரிசனம் பண்ணிட்டு அடிகளார்கிட்ட ஆசீர்வாதமும் வாங்கிக்கிட்டு வரலாம்’னு சொன்னார் நான் அவ்வளவு தூரம் எப்படிப் போறதுனு கொஞ்சம் மலைச்சுக்கிட்டு இருந்தேன் அப்புறம் `இப்படியே இருக்கோமே எப்படியாவது பெரிய ஆளாகி தம்பிகளை குடும்பத்தை நல்லமுறையில கொண்டு வரணும்’னு நினைச்சேன் `சரி போய்த்தான் பார்த்துட்டு வருவோமே’னு புறப்பட்டுப் போனேன் மேல்மருவத்தூர் ஆதி பாராசக்தி அம்மாவை தரிசனம் பண்ணினேன் அப்புறம் அடிகளாரைப் பார்க்க விஜயன் அழைச்சுக்கிட்டுப்போனார் கேஸட்டை வாங்கிப் பார்த்தார் என்னைப் பார்த்தார் `உலகமெல்லாம் உன் பாடல் ஒலிக்கப்போகுது மகனே39னு சொல்லி கையில் கொடுத்தார் `என்ன சொல்றீங்க39னு தயவா கேட்டேன் `உன் தயாரிப்பாளரெல்லாம் இப்போதான் வளர்ந்துக்கிட்டு இருக்காங்க உரிய நேரத்துல வந்து உன்னைப் பார்ப்பாங்க39ன்னு சொன்னார் `முதல்ல குலதெய்வம்தான் சாமி அதை முதல்ல வணங்கு39னு அடுத்த முறை போனப்போ சொன்னார் வீட்டுக்கு வந்ததும் எங்க அம்மா அப்பாகிட்ட விசாரிச்சேன் ஆற்காட்டிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்துல மாங்காடு கிராமம் அதுதான் எங்க சொந்த ஊர் அங்க இருக்குற மகாபலி அம்மனைத் தேடிப்போய் வணங்கினேன் என்னோட பாஸ்போர்ட்டுலகூட `மாங்காடு சொக்கலிங்கம் தேவநேசன்39னு இருக்கும் இது நடந்தது 1981-ம் வருஷம் அப்போ மேல் மருவத்தூர் கோயில் சின்னதாத்தான் இருந்தது அப்பவே ஒரு தயாரிப்பாளர் மருவத்தூர் பக்தர் `அத்தான்’னு தேங்காய் சீனிவாசனை ஹீரோவாகப் போட்டு ஒரு படம் தயாரிச்சார் அந்தப் படம் வெளியாகலை ஆனா `சக்தி வந்தாள் என்னைத் தேடி வந்தாள்39 முதல் பாடலை பாடகர் ஜெயச்சந்திரன் பாடினார் அதுக்குப் பிறகு 13 படங்கள் இசையமைச்சுட்டேன் ஆனா ஒண்ணுகூட வெளியாகவே இல்லை அதுக்காக நானும் மனசைத் தளரவிடலை அடிக்கடி அடிகளாரைப் போய்ப் பார்த்து வணங்குவேன் 1985-ம் வருஷம் `மாட்டுக்கார மன்னாரு39ங்கிற படம்தான் நான் முதன்முதல்ல இசை அமைச்சது `மனசுக்கேத்த மகராசா’னு தீனதயாளன் இயக்கத்துல ராமராஜன் நடிச்ச படம்தான் என்னைப் பிரபலப்படுத்திச்சு நான் தேடிக்கிட்டிருந்த தெய்வம் எனக்குக் கிடைச்சிடுச்சு கோடம்பாக்கம் ஏரியாவைச் சுத்தின அளவுக்குக் கோயில் இருக்கிற பக்கம் நான் சுத்தினதில்லை ஆனா அடிகளாரோட வாக்கு பலிதம் என்னை முழுசா மாத்திப் போட்டுடுச்சு அவரைக் கேட்காம எதையுமே நான் செய்றதில்லை  அதுக்கப்புறம் `வைகாசி பொறந்தாச்சு39னு தொடர்ந்து படங்கள் ஹிட்டாச்சு 50 படங்கள் பண்ணியிருப்பேன் ஒருநாள் நான் இருந்த ஸ்டூடியோவுக்கு வேற ஒருத்தர் வந்தார் `நீங்க வேற இடம் பார்த்துக்கோங்க’ன்னு சொன்னாங்க என்ன சோதனை இது என்ன பண்றதுனும் தெரியலை `இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா வளர்றோம் இந்த நேரத்துல இப்படியா39னு அடிகளார்கிட்ட போய்ச் சொன்னேன் அடிகளார் ரொம்ப கூலா சொன்னார் `அவர் இருக்கிற இடத்துக்குப் போயிடு39ன்னார் அதன் பிறகு `ஆசை’ `அண்ணாமலை’ `பாட்ஷா’னு என்னோட கரியர் அம்மன் அருளால் நல்லா வளர ஆரம்பிச்சுது `ஒரு நல்ல குரு நம்மிடம் உள்ளதை உள்வாங்கிக்கொண்டு நமக்கே நம்மை அறிமுகம் செஞ்சு வைப்பார்39னு சொல்லுவாங்க அது என் விஷயத்துல நூத்துக்கு நூறு உண்மையாச்சு அதன் பிறகு எங்க வீட்டு நிகழ்ச்சிகள் எல்லாத்துக்கும் அடிகளார் வந்துதான் நடத்திக்கொடுப்பார்  அப்படி ஒரு முறை சென்னைக்கு சுற்றுப்பயணம் வந்தபோது வளசரவாக்கம் வீட்டுல இருந்தேன் `சீக்கிரமே திநகர்ல வீடு வாங்கு அடுத்த முறை நான் வர்றப்போ திநகர் வீட்டுக்குத்தான் வருவேன்39னு சொல்லிட்டுப் போனார் அதே மாதிரி திநகர்ல வீடு வாங்கினேன் அவர் சொன்ன மாதிரியே அந்த வீட்டுக்குத்தான் அவர் வந்தார் மேல்மருவத்தூர் அம்மன் என் வாழ்க்கையில நிகழ்த்திய அற்புதங்களைச் சொல்லிக்கிட்டே போகலாம் அவர் சொல்ற எல்லா அருள்வாக்கும் பலிக்கும்`செல்லாத காசுலயும் செப்பு இருக்கும்39னு சொல்லுவார் அதே மாதிரி அரசன் முதல் ஆண்டி வரை பாரபட்சம் பார்க்க மாட்டார் அன்னதானம் அனைவருக்கும் ஒரே சாப்பாடுதான் கல்வி மருத்துவம் எதுவாக இருந்தாலும் எல்லாருக்கும் அங்கே பொதுவாகத்தான் இருக்கும் சினிமாக்காரர்கள் யார் போனாலும் அவங்ககிட்ட என்னைப் பத்தி சொல்வார் `அவன் அன்னிக்கு எப்படி வந்தானோ அதே மாதிரிதான் இப்போவும் வர்றான்39னு சொல்லுவார் ஒருமுறை எங்க குழுவில் இருந்த ஒருத்தருக்கு கேன்சர் வந்துடுச்சு அவரோட சிகிச்சைக்காக இசைநிகழ்ச்சி நடத்த முடிவு செஞ்சு அதுக்கான ஏற்பாடுகளும் நடந்தன அந்தச் சமயத்துல அடிகளார் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் போனார் `நீயும் வா அங்கே வந்து ஒரு இசை நிகழ்ச்சி நடத்து39னு சொன்னார் நான் இங்கே என்னோட சூழ்நிலையைச் சொன்னேன் `அதை நான் பார்த்துக்கிறேன் நீ வா’னு கூட்டிக்கிட்டுப் போயிட்டார் நானும் தம்பிகளை வச்சு இங்கே நிகழ்ச்சியை நடத்தச் சொல்லிட்டு கிளம்பிப்போனேன் அந்த நிகழ்ச்சியில் வசூலான மூணரை லட்ச ரூபாயை அந்தக் குடும்பத்தினருக்குக் கொடுத்திருக்காங்க அது நடந்து கொஞ்ச நேரத்துல அந்தத் துயரச் செய்தி வந்து சேர்ந்துச்சு யாருக்காக அந்த இசை நிகழ்ச்சியை நாங்க நடத்தினோமோ அவர் இறந்துபோயிட்டாருங்கறதுதான் அந்தத் துக்கச் செய்தி ஒருவிதத்துல அந்தக் குடும்பத்துக்கு அந்த நிதி உதவிகரமாகவும் அமைஞ்சுது இப்படி நாம அனுமானிக்க முடியாத விஷயங்கள்ல அடிகளார் ஒரு குருவா இருந்து என்னை வழிநடத்தி வர்றார்’’ என்கிறார் தேனிசைத் தென்றல் தேவா