மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 

0
0

மழை, வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியை முதல் வர் கே.பழனிசாமி அறிவித்துள் ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவில் கனமழை கொட்டி வருகிறது. இடுக்கி அணை நிரம்பியதால், 26 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப் பட்டது. இந்நிலையில், கேரளாவின் பல மாவட்டங் களில் எதிர்பாராத வெள் ளம் ஏற்பட்டு, கட்டமைப்பு கள் சேதமடைந்ததுடன், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள் ளன.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் முதல்வர் கே.பழனி சாமி, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி நிதி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரளாவின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழை யின் காரணமாக எதிர்பாராத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள் ளது. இதனால், பொது சொத்துக்கு அதிகளவில் சேதம் ஏற்பட்டு, பல மனித உயிர்களும் பலியாகியுள்ளன. கேரள மக்கள் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில், மழை மற்றும் வெள்ளத்தால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரள அரசுக்கும், கேரள மக்களுக்கும் இந்த நேரத்தில் தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழக அரசும், தமிழக மக்களும் தயாராக உள்ளோம். தற்போது உடனடி பங்களிப்பாக, முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 கோடி கேரள அரசுக்கு வழங்கப்படும்.

மேலும், கேரள அரசுக்கு என்ன உதவிகள் தேவைப் பட்டாலும், உடனடியாக வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.